தமிழ்நாடு

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி ஜூன் 12ம் தேதி விவசாயிகள் சங்கம் போராட்டம் ! 

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, ஜூன் 12ம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்தவுள்ளதாக,தமிழ்நாடு விவசாய சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி ஜூன் 12ம் தேதி விவசாயிகள் சங்கம் போராட்டம் ! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Bala Vengatesh
Updated on

தமிழ்நாடு விவசாய சங்க கூட்டு இயக்கத்தின் செயற்குழு கூட்டம், நாகையில் இன்று (13.05.2019) நடைபெற்றது. தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா, ஓஎன்ஜிசி நிறுவனங்களுக்கு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

காவிரி பாசன பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக, மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கக் கோரி, வரும் ஜூன் மாதம் 12- ம் தேதி விழுப்புரம், புதுவை, கடலூர், நாகை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில், விவசாயிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories