தமிழ்நாடு

மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் 13 வாக்குச்சாவடிகளின் விவரங்கள்!

மே 19 அன்று, தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட உள்ள 13 வாக்குச்சாவடிகளின் விவரங்களை வெளியிட்டார் தமிழக தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹூ.

மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் 13 வாக்குச்சாவடிகளின் விவரங்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் கடந்த ஏப்.,18-ம் தேதி 38 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலும், 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலின் 7-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மே 19-ம் தேதி அன்று தமிழகத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. அன்றைய தினமே தமிழகத்தில் உள்ள 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதில், தருமபுரியில் 8 வாக்குச்சாவடிகளிலும், தேனியில் 2 வாக்குச்சாவடிகளிலும், திருவள்ளூர், கடலூர், ஈரோடு ஆகிய மக்களவைத் தொகுதிகளில் தலா 1 வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதனையடுத்து, இன்று செய்தியாளர்களை சந்தித்த சத்ய பிரதா சாஹூ மறுவாக்குப்பதிவு நடத்தப்படும்13 வாக்குப்பதிவு மையம் குறித்த பட்டியலை வெளியிட்டார்.

சத்ய பிரதா சாஹூ (கோப்புப்படம்)
சத்ய பிரதா சாஹூ (கோப்புப்படம்)

13 வாக்குச்சாவடிகளின் விவரம்:

தருமபுரி: 181, 182, 192, 193, 194, 195, 196, 197 ஆகிய 8 வாக்குச்சாவடிகள்

தேனி: 67,197 ஆகிய வாக்குச்சாவடிகள்

கடலூர்: பண்ருட்டி அருகே திருவதிகையில் உள்ள 210-வது வாக்குச்சாவடி

ஈரோடு: திருமங்கலத்தில் உள்ள 248-வது வாக்குச்சாவடி

திருவள்ளூர்: மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள 195-வது வாக்குச்சாவடி

இதேபோல், புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியான காமராஜர் நகர் பகுதியில் வருகிற மே 12-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories