தமிழ்நாடு

“என்னால் சாப்பிட முடியவில்லை” - வாயில் மலம் திணித்த சாதியக் கொடுமை!

திருவாரூர் மாவட்டம் திருவண்டுதுறை கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, ஆதிக்க சாதியினர் மலத்தைத் திணித்து, சிறுநீரை அவர்மேல் ஊற்றி அராஜகத்தில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“என்னால் சாப்பிட முடியவில்லை” - வாயில் மலம் திணித்த சாதியக் கொடுமை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருவண்டுதுறை கிராமத்தைச் சேர்ந்த கூழி தொழிலாளி கொல்லிமலை. தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். 28-ம் தேதி தனது செங்கல் சூலைக்கு சொன்று விட்டுத் திரும்பும் வேலையில் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த சக்திவேல், ராஜேஷ், ராஜ்குமார் ஆகியோர் அவரை சாதிய வன்மத்துடன் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலின் போது நிலைகுலைந்து போன கொல்லிமலையை, செங்கல் கொண்டு கொடுராமாக தாக்கியுள்ளனர். பின்னர் குச்சியில் மலத்தை எடுத்து இவரது வாயில் திணித்த கொடூரத்தையும் செய்துள்ளனர். பின்னர் மூவரும் அவர் மீது சிறுநீரைக் கொட்டி மனிதாபிமானமற்ற செயலை செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“என்னால் சாப்பிட முடியவில்லை” - வாயில் மலம் திணித்த சாதியக் கொடுமை!

இந்த சம்பவத்தை வெளி கொண்டு வந்த சமூக செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர், கொல்லிமலைக்கு நடந்த கொடுமைக்கு பற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் விவரித்தார்.

” 70 வருட மேலாகும் சுதந்திர தேசத்தில், சாதிய வன்முறைகள் குறையவே இல்லை. இது போலச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது வருத்தமளிக்கிறது. மேலும் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த 3 குற்றவாளிகளையும் பொதுமக்கள் கொட்டூர் காவல் நிலையத்தில் பிடித்துக்கொடுத்துள்ளனர். முதலில் முத்து என்ற சக்திவேல் மீது மட்டும் வழக்கு தொடர்ந்து விட்டு, மற்ற இருவர்களை விடுவித்துள்ளனர். அதுமட்டுமின்றி போலீசார் எஃப்.ஐ.ஆர்-ல் சாதியைச் சொல்லித் தீட்டியதை மட்டும் இணைத்துவிட்டு, மலத்தைத் திணித்ததைக் குறிப்பிடவில்லை. முறையாக வழக்கைப் பதிவு செய்யாமல் அலட்சியமாக நடந்து கொண்டதற்கும், குற்றவாளிகள் 2 பேரை விடுவித்த குற்றத்திற்கும் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை சட்டத்தில் அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம்.” என்றார் கதிர்.

இந்த கொடூர சம்பவத்தால் பாதிக்கப்பட்ட கொல்லிமலை கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். “இன்னும் மல வாடை அடிப்பது போல இருக்கிறது. என்னால் சாப்பிடக் கூட முடியவில்லை” என வருந்துகிறார்.

இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் 5 வருடத்திற்கு முன்னாள் நடைபெற்ற கோவில் திருவிழாவில் எற்பட்ட வன்முறையை மனதில் கொண்டு இந்த வன்முறையை மேற்கொண்டதாகத் தெரியவருகிறது. மேலும் புகாரின் அடிப்படையில், சாதிய வன்கொடுமை சட்டம் உட்பட்ட 5 பிரிவுகளின் கீழ் குற்றவாளிகள் மீது வழக்குப் பதிந்து சக்திவேல் மற்றும் ராஜேஷ் ஆகியேரை கைது செய்துள்ளனர்.

தலைமறைவான ராஜ்குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். ஒருபுறம் சாதி ஒழிப்பு பற்றி விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் தமிழகமே வெட்கிதலைகுனிய வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories