தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் நடத்தும் சூழல் தற்போது இல்லை - தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல்!

உள்ளாட்சி தேர்தல் நடத்தும் சூழல் தற்போது இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் நடத்தும் சூழல் தற்போது இல்லை - தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் ரமேஷ் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உள்ளாட்சி தேர்தல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.

தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் வார்டு வரையறை பணி முடியும் தருவாயில் இருப்பதாக தெரிவித்து. மேலும் மக்களவை தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் உடனே உள்ளாட்சி தேர்தல் நடத்துவது சாத்தியம் இல்லை என்றும், வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டியுள்ளதால் உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த முடியாத சூழல் உள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்தது.

குடிநீர், மின்சார விநியோகம், தெருவிளக்குகளை சரிசெய்தல், சுகாதாரப் பணி உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கு மே 10-ம் தேதி விசாரணை நடைபெறும் என்று உத்தரவிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories