தமிழ்நாடு

தமிழகத்தில் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது!

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று (சனிக் கிழமை) தொடங்கி 29 வரை தொடர்கிறது.

தமிழகத்தில் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கோடை வெயிலின் உச்சமான அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் காலம் இன்று தொடங்கி வருகிற 29-ந் தேதி வரை நீடிக்க இருக்கிறது. இதனால், இந்த காலக்கட்டத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால் மக்கள் பெரிதும் அச்சத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

அதே நேரத்தில் தமிழகத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு அனல்காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை மைய அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

தமிழகத்தில் ஃபானி புயலின் தாக்கத்தினால் எந்தவித பாதிப்பும் இல்லை. தமிழகத்தை பொறுத்தவரையில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும். தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசக்கூடும்.

ஒருவேளை, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 7-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories