தமிழ்நாடு

நீட் தேர்வு நாளை மறுநாள் நடக்க உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்வு மையங்கள் மாற்றம்!

நாளை மறுநாள் நீட் தேர்வு நடக்க உள்ள நிலையில், நெல்லை மற்றும் மதுரையில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த 6 தேர்வு மையங்கள் திடீரென மாற்றப்பட்டுள்ளது.

நீட் தேர்வு நாளை மறுநாள்  நடக்க உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்வு மையங்கள் மாற்றம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

நாளை மறுநாள் நீட் தேர்வு நடக்க உள்ள நிலையில், நெல்லை மற்றும் மதுரையில் அமைக்கப்பட்டிருந்த 6 தேர்வு மையங்கள் திடீரென மாற்றப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது. தமிழகத்திலும் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்த நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

நீட் தேர்வு நாளை மறுநாள்  நடக்க உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்வு மையங்கள் மாற்றம்!

இந்நிலையில்,மதுரையில் நீட் தேர்வுக்காக அமைக்கப்பட்டிருந்த 6 தேர்வு மையங்கள் கடைசி நேரத்தில் திடீரென மாற்றப்பட்டுள்ளன. எதற்காக, தேர்வு மையம் மாற்றப்பட்டது என்பதற்கான விளக்கம் மாணவர்களுக்கு அளிக்கப்படவில்லை. கடந்தாண்டு நீட் தேர்வின் போது தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories