சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 870 கிமீ தொலைவில் ஃபோனி புயல் நிலைகொண்டுள்ளது. இது, தீவிர புயலாகவும், நாளை அதி தீவிர புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவின் கரைக்கு அருகே சுமார் 300 கிமீ தொலைவில் வரக்கூடும்.
இதனால் வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் ஏப்.,30 மற்றும் மே 1ம் தேதி மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், வட தமிழகத்தின் கடலோர பகுதிகளில் நாளை காலை மணிக்கு 40-60 கிமீ வேகத்திலும், மாலை 50-70 கிமீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் ஏப்.,30 மற்றும் மே 1ம் தேதிகளில் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால் மே 2ம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.