தமிழ்நாடு

“குழந்தைகள் விற்பனைக்கு...” - தமிழகத்தின் பெரும் அவலம்!

குழந்தைகளின் நிறம், பாலினம், ஆரோக்கியம் உள்ளிட்ட காரணிகளைப் பொறுத்து குழந்தைகளின் விலை நிர்ணயிக்கப்படுகிறதாம்.

Children for Sale
Artist : A.Nanmaran Children for Sale
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகளை விற்பனை செய்வது தொடர்பாக ஓய்வுபெற்ற செவிலியர் பேசிய ஆடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட செவிலியர் அமுதாவிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையின் மூலம் குழந்தைகள் விற்பனையில் தொடர்புடைய செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர், தரகர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

குழந்தைகளின் நிறம், பாலினம், ஆரோக்கியம் உள்ளிட்ட காரணிகளைப் பொறுத்து குழந்தைகளின் விலை நிர்ணயிக்கப்படும் என ஓய்வுபெற்ற செவிலியர் பேசியது தமிழக தாய்மார்களையும், பொதுமக்களையும் உலுக்கியது.

குழந்தைகள் விற்பனைக்கு!
குழந்தைகள் விற்பனைக்கு!

சிலபல ஆண்டுகளாகவே இந்த சட்டவிரோத குழந்தை விற்பனைத் தொழில் நடைபெற்று வருவதால் இன்னும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிப்படும் எனத் தெரிகிறது. குழந்தைக்குப் பேசப்படும் விலை நமக்குச் சொல்வது மனிதம் மரித்து வருவதைத்தான்.

banner

Related Stories

Related Stories