தமிழ்நாடு

“10ம் வகுப்பு பொதுத்தேர்விலும் திருப்பூர் மாவட்டம் முதலிடம்”

2018-19ம் ஆண்டுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. வழக்கம் போல் மாணவிகளே முதலிடம் பிடித்தனர்.

“10ம் வகுப்பு பொதுத்தேர்விலும் திருப்பூர் மாவட்டம் முதலிடம்”
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.

2018-19ம் ஆண்டுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 14 முதல் 29ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 9 லட்சத்துக்கும் மேலான மாணவ மாணவிகள் தேர்வுகளை எழுதினர்.

இதற்கான முடிவுகளை அரசு தேர்வுத்துறை இயக்குநரகம் இன்று வெளியிட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை tnresults.nic.in என்ற இணையதள முகவரியில் TN SSLC Result 2019, TamilNadu Result 2019 என்பதில் தேர்வு செய்து கண்டறியலாம்.

தமிழகம் முழுவதும் 95.2% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 97%-ம், மாணவர்கள் 93.3%-ம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

12ம் வகுப்பை தொடர்ந்து 10ம் வகுப்பு பொதுத்தேர்விலும் திருப்பூர் மாவட்டமே முதலிடம் பிடித்துள்ளது.

மொத்த அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 92.48% பேரும், மெட்ரிக் பள்ளிகளின் 99.5% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் சிறைக்கைதிகளில் 110 பேர் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

banner

Related Stories

Related Stories