தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு - சிபிஐ விசாரணையை தொடங்கியது!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கில் சிபிஐ இன்று விசாரணையை தொடங்கியுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு - சிபிஐ விசாரணையை தொடங்கியது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அதனை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில், திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் மற்றும் மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்த நிலையில், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. எனினும், சிபிஐ விசாரணையை தொடங்கவில்லை.

இதற்கிடையே, பொள்ளாச்சி பாலியல் வன்கொடூரச் சம்பவம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கக் கோரி பொன்னேரியை சேர்ந்த எஸ்.வாசுகி என்ற வழக்கறிஞர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இதற்கு பதிலளித்து சி.பி.சி.ஐ.டி., பெண் எஸ்.பி. தாக்கல் செய்த மனுவில், வழக்குகள் விசாரணையை எடுத்துக் கொள்வது குறித்து சிபிஐ தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை எனவும் கூறப்பட்டிருந்தது.இந்த நிலையில், சிபிஐ இவ்விவகாரத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை இன்று தொடங்கியுள்ளது.

பாலியல் வன்கொடுமை மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கையும் சிபிஐ விசாரிக்க உள்ளது.

banner

Related Stories

Related Stories