தமிழ்நாடு

மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தன : தேர்தல் ஆணையம் ஒப்புதல்

மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தன என சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தன : தேர்தல் ஆணையம் ஒப்புதல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மதுரை பாராளுமன்ற தொகுதியில் கடந்த 18-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்தன.

இதற்கிடையே, வாக்கு எண்ணிக்கை மையத்தில் தாசில்தார் நுழைந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி நுழைந்த அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரி நுழைந்தது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையத்திடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். மதுரை ஆட்சியரின் உதவியாளர் மீது என்ன நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது?; வட்டாட்சியருக்கு உள்ள அதிகாரம் தலைமை தேர்தல் அதிகாரிக்கு இல்லையா: வட்டாட்சியர்கள் எது செய்தாலும் கண்டுகொள்ளாமல் தலைமை தேர்தல் அதிகாரி இருந்துவிடுவாரா? என்ற கேள்விக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி ஒரு போஸ்ட் மேன் மாதிரிதான், தலைமைத் தேர்தல் அதிகாரியால் யார் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது என தேர்தல் ஆணைய வழக்கறிஞர் பதிலளித்துள்ளார்.

யார் வேண்டுமானாலும் நுழையலாம் என்றால் பாதுகாப்பே இல்லை என்றுதான் அர்த்தம் என்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு மாவட்ட ஆட்சியர் தினமும் சென்றாரா? நேர்மையான தேர்தலை நடத்துவதாக கூறும் ஆணையம் இதிலும் அப்படித்தானே செயல்பட்டிருக்க வேண்டும் என்றனர்.

இதற்கு மதுரை மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் சில பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தன; ஆட்சியரின் உதவியாளர் அறிவுறுத்தலின் பேரில் வட்டாட்சியர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்றார் என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி அனுப்பிய பரிந்துரை அடிப்படையில் 2 நாட்களில் முடிவு செய்யப்படும் என்றார்.

தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் வரை நீதிமன்றம் காத்துகொண்டிருக்க முடியாது; மதுரை மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் குறித்து இன்று மாலை உத்தரவிடுவோம் என்றனர்.

banner

Related Stories

Related Stories