தமிழ்நாடு

தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு தொடக்கம்!

முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான 2-ம் கட்ட கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் இன்று தொடங்கி 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.

தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு தொடக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் காலியாக உள்ள 1,761 எம்.டி., எம்.எஸ்., பட்ட மேற்படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு கடந்த ஏப்.,1-ம் தேதி தொடங்கி 4-ம் தேதி வரை நடைபெற்றது.

இதில், 849 அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை தவிர, மாநில அரசின் 912 ஒதுக்கீட்டு இடங்களுக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 181 அரசு ஒதுக்கீடு இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்பட்டது.

ஏப்.,5ம் தேதி தனியார் பல் மருத்துவக் கல்லூரி இடங்களுக்கும், 6-ம் தேதி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீடு முதுநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வும் நடத்தப்பட்டது. மொத்தம் 999 இடங்கள் முதற்கட்ட கலந்தாய்வில் நிரம்பின.

இந்நிலையில், அரசு ஒதுக்கீட்டில் உள்ள 345 எம்.டி., எம்.எஸ். படிப்பு இடங்களுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு இன்று முதல் ஏப்ரல் 29 வரை சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் நடத்தப்படுகிறது.

கலந்தாய்வு, காலை 9 மணி, காலை 11 மற்றும் பிற்பகல் 2 என மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. 2-ம் கட்ட கலந்தாய்வின் முதல் நாளான இன்று 1007.50 - 550 என்ற தரவரிசையின் அடிப்படையில் உள்ளவர்களுக்கு கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கான அட்டவணை
இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கான அட்டவணை
banner

Related Stories

Related Stories