தமிழ்நாடு

கோடை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா தலங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கம் ! 

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் கோடை விடுமுறை காலத்தில் பொதுமக்கள் சுற்றுலா மையங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்குகிறது.

கோடை விடுமுறையை முன்னிட்டு  சுற்றுலா தலங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கம் ! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் கோடை விடுமுறை காலத்தில் பொதுமக்கள் சுற்றுலா மையங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்குகிறது.

சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் நகரின் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா தலங்களுக்கு 150 சிறப்பு பேருந்துகள் நேற்று முதல் விடப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 30-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.

மெரினா கடற்கரை, அண்ணாசதுக்கம் செல்வதற்கு 50 பேருந்துகளும், கோவளத்திற்கு 3 பேருந்துகளும், வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு 21பேருந்துகளும், மாம்மல்லபுரம்- 7 பேருந்துகளும் விடப்பட்டுள்ளது.

பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு 8, திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவிலுக்கு -8, சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு 3 சிறப்பு பஸ்கள் வீதம் விடுமுறை நாட்களில் விடப்படுகின்றன.

இந்த சிறப்பு பஸ்கள் 21 ஜி, 27 எல், 25 ஜி, 11 எச், 12 ஜி, 45 பி, 102, 13, 6டி, 2ஏ, 27பி, 22 பி, 27எச், 40ஏ, 29ஏ, 500, 517, பி18, ஜி18, ஈ18, 70வி, 99, வி51, 517கட், 109கட், 515, 588, 514, 547, 580, 159, 50, 72சி, 29இ, 59 ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories