தமிழ்நாடு

அடிப்படை வசதிகள் இல்லாத வாக்குசாவடிகள் - தவிக்கும் மாற்றுத் திறனாளிகள் 

தமிழ்நாட்டின் பல வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவும் இயந்திரங்கள் கோளாறானதால் தாமதமாகவே வாக்குப்பதிவு தொடங்கியது

அடிப்படை வசதிகள் இல்லாத வாக்குசாவடிகள் - தவிக்கும் மாற்றுத் திறனாளிகள் 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 மக்களைவத் தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 மணி முதல் தொடங்கியது.

தமிழ்நாட்டின் பல வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறானதால் தாமதமாகவே வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால் காலை முதலே வரிசையில் நின்ற மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

மேலும், வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததாக குற்றச்சாட்டு எழுந்தது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் வாக்களிக்க போதுமான வசதிகள் இல்லாததாலும் கடும் அதிருப்தி அடைந்தனர். நேற்று சென்னையில் இருந்து வாக்களிக்க சென்ற மக்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தித் தராததால், மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் மீது போலீஸ் தடியடியும் நடத்தப்பட்டது.

ஒட்டுமொத்தமாக தேர்தல் ஏற்பாடு பணிகளில் தேர்தல் ஆணையமும், தமிழக அரசு மெத்தனமாக செயல்பட்டு வருவதாகக் மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories