தமிழ்நாடு

இடைத்தேர்தல் நடக்க இருக்கும் 4 தொகுதிகளில் பிரசாரம் செய்ய ஏப்ரல்19 வரை தடை 

இன்று மாலை 6 மணி முதல் தேர்தல் பிரசாரங்கள் முடிவடைகின்றன.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சதிய பிரதா சாகு
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சதிய பிரதா சாகு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Mohan Prabhaharan
Updated on

இரண்டாம் கட்ட மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி தமிழகத்தில் நடைபெற இருக்கிறது. அதை முன்னிட்டு இன்று மாலை 6 மணி முதல் பிரசாரங்களுக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைகிறது.

6 மணிக்கு மேல் அரசியல் தலைவர்களோ, கட்சி பிரமுகர்களோ எந்த வித பிரசாரத்திலும் ஈடுபடக் கூடாது என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார். தொலைக்காட்சி மற்றும் இணையதள விளமபரங்களுக்கு அனுமதி கிடையாது.

மேலும் ஊடகங்களை சந்திக்கும் போது, பிரசார ரீதியாக எதுவும் பேசக் கூடாது எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மே 19-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் 4 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்யலாமா என்ற கேள்வி தேர்தல் ஆணையர் முன் வைக்கப்பட்டது. அந்த 4 தொகுதி மக்கள், நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பதால் ஏப்ரல் 19-ம் தேதி வரை அந்தத் தொகுதிகளில் பிரசாரம் செய்யத் தடை விதிக்கப்படுகிறது என்றார்.

banner

Related Stories

Related Stories