விளையாட்டு

இந்தியா - நியூசிலாந்து இடையே இன்று தொடங்கும் T20 போட்டி… எங்கு? எப்போது? - முழு விவரம் உள்ளே!

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட T20 தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், ஒருநாள் தொடரை இழந்துள்ள இந்திய அணி, T20 தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்தியா - நியூசிலாந்து இடையே இன்று தொடங்கும் T20 போட்டி… எங்கு? எப்போது? - முழு விவரம் உள்ளே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. வரலாற்றில் சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது இதுவே முதல்முறையாகும்.

இதையடுத்து இன்று (ஜனவரி 21) முதல் இந்தியா - நியூசிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்க உள்ளது. நீண்டகாலமாக இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் தொடர்களை வெல்ல முடியவில்லை என்ற மோசமான சாதனைகளை கடந்த இரண்டு ஆண்டுகளில் நியூசிலாந்து அணி முறியடித்துள்ளது.

இந்த சாதனைப் பட்டியலில் இன்னும் இந்திய மண்ணில் டி20 தொடரை கைப்பற்றாதது மட்டுமே மீதம் உள்ளது. அந்த சாதனையையும் நியூசிலாந்து அணி நிறைவேற்றுமா அல்லது சூர்யகுமார் யாதவ் தலைமையிலான T20 அணி தனது ஆதிக்கத்தை தொடருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்தியா - நியூசிலாந்து இடையே இன்று தொடங்கும் T20 போட்டி… எங்கு? எப்போது? - முழு விவரம் உள்ளே!

வரும் பிப்ரவரி மாதம் 7ம் தேதி முதல் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்கவுள்ள நிலையில், நடப்பு சாம்பியனாக களம் இறங்கும் இந்திய அணிக்கு, தற்போது நடைபெறவுள்ள நியூசிலாந்து உடனான T20 தொடர் மிகவும் முக்கியமானதாகும். வீரர்களின் ஆட்டத்தையும் திறமையையும் பரிசோதிக்கவும், சரியான ஜோடிகளை உறுதி செய்யவும் கேப்டன் சூர்யகுமார் யாதவிற்கு இதுவே நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இன்று இரவு 7 மணிக்கு ஆட்டம் தொடங்க உள்ளது.

இந்திய அணியில் உத்தேசமாக அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, அக்சர் பட்டேல், ரிங்கு சிங், ஹர்ஷித் ராணா அல்லது ஷிவம் துபே, அர்ஷ்தீப் சிங் அல்லது குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல் நியூசிலாந்து அணியில் உத்தேசமாக டிம் ராபின்சன், டிவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர் (கேப்டன்), மேட் ஹென்றி, சோதி, ஜேக்கப் டப்பி ஆகியோர் ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத்தொடரின் அனைத்து T20 போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்குத் தொடங்கும். இதற்கான டாஸ் மாலை 6:30 மணிக்கு போடப்படும். ரசிகர்கள் இந்தப் போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சியிலும், தொலைபேசியில் ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) ஆப் மூலமாகவும் நேரலையில் கண்டு மகிழலாம். தமிழ் ரசிகர்களுக்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் சேனலில் நேரடி ஒளிபரப்பும் உள்ளது.

இந்தியா - நியூசிலாந்து இடையே இன்று தொடங்கும் T20 போட்டி… எங்கு? எப்போது? - முழு விவரம் உள்ளே!

இவ்விரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர் மோதிய 25 டி20 போட்டிகளில் இந்திய அணி 14 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி 10 வெற்றிகளைப் பெற்றுள்ளது. மீதம் உள்ள ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது. இருப்பினும், உலகக்கோப்பைக்கு முன்னதாக இரு அணிகளும் சமபலத்துடன் மோதும் என்பதால் இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே நடைபெற உள்ள இந்தத்தொடரை இந்திய அணி கைப்பற்றும் பட்சத்தில், இதே முனைப்புடன் அடுத்தடுத்த தொடர்களில் களமிறங்கும். T20 உலகக்கோப்பையின் முன்னோடியாக பார்க்கப்படும் இந்த தொடர் வீரர்களுக்கு மட்டுமில்லாமல் இந்திய அணிக்கே முக்கியமானதாகும்.

banner

Related Stories

Related Stories