
இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
முதலில் தொடங்கிய ஒருநாள் தொடரில், முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை ஆஸ்திரேலியா வென்றது. பிறகு மூன்றாவதாக நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 237 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது, ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி தூக்கி அடிந்த பந்தை ஸ்ரேயாஸ் பின்னோக்கி ஓடிச் சென்று கேட்ச் பிடித்தார். இந்த கேட்ச் பிடிக்கும் போது அவர் நிலைதடுமாறி விழுந்தார்.
இதில் அவருக்கு விலா எலும்பில் காயம் ஏற்பட்டது. இதனால் ஸ்ரேயாஸ் ஆட்டத்தின் பாதியிலேயே வெளியேறினார்.
இந்நிலையில், சிட்னியில் உள்ள மருத்துவமனையில் ICU பிரிவில் ஷ்ரேயாஸ்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, உடலுக்குள் ரத்தக் கசிவு இருந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவருக்கு, கடந்த இரண்டு நாட்களாக ICUவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஒரு வாரத்திற்கு அவர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.






