விளையாட்டு

Brazil Legends VS Indian All Stars: போட்டியை தொடங்கி வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி: வெற்றி பெற்றது யார்?

Brazil Legends VS Indian All Stars: போட்டியை தொடங்கி வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி: வெற்றி பெற்றது யார்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பிரேசில் லெஜெண்ட்ஸ் மற்றும் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணிகள் மோதும் வரலாற்று சிறப்புமிக்க கால்பந்து காட்சிப்போட்டி சென்னை நேரு விளையாட்டரங்கில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Football Plus இந்தியா அகாடமியும், பிரேசில் கால்பந்து அகாடமியும் இணைந்து இந்த காட்சிப்போட்டியை நடத்துகின்றன. இந்த போட்டியில் பிரேசில் லெஜண்ட் அணியில் ரொனால்டினோ, ரிவால்டோ, கில்பர்ட் சில்வா, கஃப், உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் பங்கேற்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

Brazil Legends VS Indian All Stars: போட்டியை தொடங்கி வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி: வெற்றி பெற்றது யார்?

அதே போல இந்திய அணியில் ஜாம்பவான் வீரர்களான விஜயன், வெங்கடேசன், மோகன் ராஜ், தர்மராஜ், கரன்சித் சிங், ஹுசைன், உள்ளிட்டோர் விளையாடவுள்ளனர். இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனையானது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரேசில் லெஜெண்ட்ஸ் அணி 2-1 என்ற கணக்கில் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் அணியை தோற்கடித்தது. பிரேசில் லெஜண்ட்ஸ் அணி சார்பாக Viola, Ricardo Oliveira மற்றும் இந்தியா ஆல் ஸ்டார்ஸ் சார்பாக பிபியானோ கோல் அடித்தனர். அடுத்ததாக Football Plus இந்தியா சார்பில் நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னையில் சர்வதேச அளவிலான கால்பந்து உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. இதில் 2002 உலகக் கோப்பையை வென்ற பிரேசில் அணி வீரர்கள் பங்கேற்று கலந்துரையாடவுள்ளனர்.

banner

Related Stories

Related Stories