விளையாட்டு

'ஹர்திக், ஹர்திக்' : நாயுடன் ஒப்பிட்டு விமர்சித்த அதே மைதானத்தில் கொண்டாடப்படும் ஹர்திக் பாண்டியா !

'ஹர்திக், ஹர்திக்' : நாயுடன் ஒப்பிட்டு விமர்சித்த அதே மைதானத்தில் கொண்டாடப்படும் ஹர்திக் பாண்டியா !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் பரிமாற்ற முறையில் குஜராத் அணியின் வெற்றிகரமான கேப்டனாக வளம்வந்த ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு செல்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மும்பை அணிக்கு வந்ததும் கேப்டனாக்கப்பட்டதால் அந்த அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, சூரியகுமார், பும்ரா ஆகியோர் ஹர்தீக் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.

மேலும், ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்களும் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். இதனைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற குஜராத் - மும்பை அணிகளுக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் கிண்டல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் மும்பை அணியின் சொந்த மைதானமான வான்கடேவில் நடைபெற்ற போட்டியில் சொந்த அணியின் ரசிகர்களாலேயே ஹர்திக் பாண்டியா கிண்டலுக்கு உள்ளாகினார். அதிலும் மும்பை மைதானத்தில் ஒரு நாய் சென்றபோது அதனை ஹர்திக் என்று கத்தி ரசிகர்கள் ஹர்திக் பாண்டியனை விமர்சிக்கும் அளவு நிலைமை மோசமாக சென்றது.

'ஹர்திக், ஹர்திக்' : நாயுடன் ஒப்பிட்டு விமர்சித்த அதே மைதானத்தில் கொண்டாடப்படும் ஹர்திக் பாண்டியா !

அன்று அப்படி விமர்சிக்கப்பட்ட அதே மும்பை வான்கடே மைதானத்தில் 'ஹர்திக், ஹர்திக்' என ரசிகர்கள் முழங்கும் அளவு சில மாதங்களில் ஹர்திக் பாண்டியாவின் வாழ்க்கை மாறியுள்ளது. தற்போது இந்திய அணியின் கரங்களில் 13 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பை கிடைத்துள்ளது என்றால் அதற்கு ஹர்திக் பாண்டியா ஒரு முக்கிய காரணமாக திகழ்ந்துள்ளார்.

இறுதிப்போட்டியில் தென்னாபிரிக்க வீரர் க்ளாஸன் இந்திய பந்துவீச்சை சிதறடித்த நிலையில் அவரின் விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கையே ஹர்திக் பாண்டியா மாற்றிக் காட்டினார். அதோடு இறுதி ஓவரை வீசி அதில் மில்லரின் விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் ஹர்திக் பாண்டியா திகழ்ந்தார்.

இதன் காரணமாக சில மாதங்களுக்கு முன்னர் ஹர்திக் பாண்டியாவை விமர்சித்தவர்களே அவரை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தற்போது மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணிக்கு பாராட்டு விழா நடைபெறும் நிலையில், அங்கு கூடியிருந்த ரசிகர்கள் பலர் 'ஹர்திக், ஹர்திக்' என கோஷமிட்டு ஹர்திக் பாண்டியாவை கொண்டாடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories