விளையாட்டு

EURO 2024 : போர்த்துக்கல் அணியை வீழ்த்திய கத்துக்குட்டி ஜார்ஜியா... Knock Out-க்கு முன்னேறிய அணிகள் என்ன?

EURO 2024 : போர்த்துக்கல் அணியை வீழ்த்திய கத்துக்குட்டி ஜார்ஜியா... Knock Out-க்கு முன்னேறிய அணிகள் என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கால்பந்தில் உலககோப்பைக்கு பின்னர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் யூரோ கோப்பை தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி என உலககோப்பைகளை வென்ற அணிகள் கலந்துகொள்கின்றன.

மேலும் முக்கிய அணிகளான பெல்ஜியம், போர்த்துக்கல், நெதர்லாந்து, குரோஷியா போன்ற வலுவான அணிகளும் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வதால் இந்த தொடர் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொடரின் இறுதி லீக் சுற்று போட்டிகள் நேற்று நடைபெற்றது. இதில் துருக்கி அணி 2-1 என்ற கணக்கில் செக் குடியரசு அணியை வீழ்த்தியது. தொடர்ந்த நடைபெற்ற ஆட்டத்தில் அடுத்த சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறிய ரொனால்டோவின் போர்த்துக்கல் அணி ஜார்ஜியா அணியை சந்தித்தது.

EURO 2024 : போர்த்துக்கல் அணியை வீழ்த்திய கத்துக்குட்டி ஜார்ஜியா... Knock Out-க்கு முன்னேறிய அணிகள் என்ன?

இதில் ஆட்டத்தின் 2-வது நிமிடத்திலேயே ஜார்ஜியா கோல் அடித்து அசத்தியது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய அந்த அணி ஆட்டத்தின் 52-வது நிமிடத்தில் பெனால்டி மூலம் கிடைத்த வாய்ப்பில் மற்றுமொரு கோலை அடித்தது. இதற்கு இறுதிவரை போர்த்துக்கல் அணியால் பதில் கோல் அடிக்க முடியாததால் ஜார்ஜியா அணி

2-0 என்ற கணக்கில் போர்த்துக்கல் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. ஜார்ஜியா அணி முக்கிய கால்பந்து தொடரின் லீக் சுற்றை தாண்டுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

யூரோ தொடரின் அடுத்த சுற்றுக்கு ஸ்பெயின் , ஸ்விட்சர்லாந்து, இத்தாலி, இங்கிலாந்து, ஸ்லோவாக்கியா, ரோமானியா, நெதர்லாந்து, ஆஸ்திரியா, துருக்கி, ஜெர்மனி, டென்மார்க், ஜார்ஜியா , பிரான்ஸ், பெல்ஜியம், போர்த்துக்கல் , ஸ்லோவேனியா ஆகிய அணிகள் முன்னேறியுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குரோஷியா அணி லீக் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சியளித்துள்ளது.

banner

Related Stories

Related Stories