விளையாட்டு

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் சுனில் சேத்திரி : பிரியாவிடை அளித்த ரசிகர்கள் !

இந்திய கால்பந்து அணியின் கேப்டனான சுனில் சேத்திரி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் சுனில் சேத்திரி : பிரியாவிடை அளித்த ரசிகர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலக அளவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் கால்பந்தை மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ ஆண்டு வருகின்றனர். இதன் காரணமாக உலகெங்கும் இவ்ர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். கிளப் மற்றும் நாட்டுக்காக ஏராளமான கோல்களை குவித்துள்ள இவர்கள் சாம்பியன் வீரர்களாக கொண்டாடப்படுகிறார்கள்.

இது தவிர இந்தியாவிலும் இவர்களுக்கு பெரும் அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், இவர்களுக்கு மாற்றாக தற்போது இந்திய கால்பந்து ரசிகர்கள் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்திரியின் பெயரை உச்சரித்து வருகின்றனர். அதிலும் சமீப காலமாக இவர் செய்துள்ள சாதனைகளால் இவர் உலகளவில் கொண்டாடப்படும் வீரராகவும் மாறியுள்ளார்.

சர்வதேச அளவில் நாட்டுக்காக அதிக கோல் அடித்த நடப்பு வீரர்கள் பட்டியலில் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸிக்கு அடுத்த இடத்தில் சுனில் சேத்திரி இருக்கிறார். மேலும், அவர் தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் இன்டர்கான்டினென்டல் கோப்பை மற்றும் தெற்காசிய கோப்பையை வென்று அசத்தியது.

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் சுனில் சேத்திரி : பிரியாவிடை அளித்த ரசிகர்கள் !

இந்த நிலையில், சர்வதேச போட்டிகளில் இருந்து சுனில் சேத்திரி ஓய்வு பெற்றுளளார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சுனில் சேத்திரி அறிவித்திருந்த நிலையில், இந்தியாவுக்காக அவரின் கடைசி போட்டி நேற்று நடைபெற்றது. இந்தியா - குவைத் அணிகளுக்கு இடையான இந்த போட்டி 0-0 சமனில் முடிவடைந்தது.

இந்த போட்டி முடிந்தபின்னர் சக கால்பந்து வீரர்கள், ரசிகர்கள் என மைதானத்தில் இருந்த அனைவரும் மரியாதையுடன் சுனில் சேத்ரிக்கு பிரியாவிடை கொடுத்தனர். இந்திய அணிக்காக 151 போட்டிகளில் விளையாடி 94 கோல்களை பதிவு செய்துள்ள சுனில் சேத்திரிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories