விளையாட்டு

"களத்தில் என்ன செய்யவேண்டும் என எனக்கு தெரியும்" - விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்த விராட் கோலி !

களத்தில் தினசரி அணிக்காக சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியும் என விராட் கோலி கூறியுள்ளார்.

"களத்தில் என்ன செய்யவேண்டும் என எனக்கு தெரியும்"  - விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்த விராட் கோலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. அதனைத் தொடர்ந்து டி20 அணியில் இதனால் இந்திய அணியில் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மாவின் டி20 பயணம் முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.

ஆனால், அவர்களின் டி20 பயணம் குறித்து அவர்களே முடிவே செய்துகொள்ளலாம் என பிசிசிஐ சார்பில் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் இந்த இருவரும் அணியில் இடம்பிடித்தனர். இதனால் அடுத்த உலகக்கோப்பை தொடரிலும் அவர்கள் இடம்பெறுவர் என்பது ஏறக்குறைய உறுதியானதாக கூறப்பட்டது.

ஆனால், 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலியை நீக்க தேர்வுக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலி சிறப்பாக ஆடி அதிக ரன் குவித்தவருக்கான ஆரஞ்சு நிற தொப்பியை வைத்திருந்தும் அவரின் ஸ்ட்ரைக் ரேட்டை காரணமாக காட்டி அவரை உலகக்கோப்பைகான அணியில் எடுக்கக்கூடாது என பலரும் கூறி வருகின்றனர்

"களத்தில் என்ன செய்யவேண்டும் என எனக்கு தெரியும்"  - விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்த விராட் கோலி !

இந்த நிலையில், களத்தில் தினசரி அணிக்காக சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியும் என விராட் கோலி கூறியுள்ளார். நேற்று குஜராத் அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் பேசிய விராட் கோலி, "முதல் பாதியில் ஆடியதை போல எங்களால் இனி ஆட முடியாது. நாங்கள் முன்பை விட அட்டாக்கிங் ஆட்டத்தை ஆட விரும்புகிறோம். சுயமரியாதைக்காக நாங்கள் ஆடவிரும்புகிறோம். என் ஸ்ட்ரைக் ரேட்டைப் பற்றியும், ஸ்பின்னர்களுக்கு எதிரான என் ஆட்டத்தைப் பற்றியும் விமர்சிப்பவர்கள் இன்று எனது ஆட்டத்தை பார்த்திருப்பார்கள் .

ஆனால், அவர்களை பற்றி நான் கவலைப்படவில்லை. அணிக்காக போட்டிகளை வென்று கொடுப்பதே என் வேலை. அதை 15 ஆண்டுகளாக செய்துகொண்டிருக்கிறேன். கமென்ட்ரியில் என்னை விமர்சிக்கும் நீங்கள் இந்த சூழலிலெல்லாம் இருந்திருப்பீர்களா என்று தெரியவில்லை. அங்கே உட்கார்ந்து யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், களத்தில் தினசரி அணிக்காக சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியும்"என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories