விளையாட்டு

"மும்பை அணி கோப்பையை வெல்வது கடினம் " - மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் லாரா கருத்து !

இந்த தொடரில் மும்பை அணி கோப்பையை வெல்வது கடினம் என மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஜாம்பவான் லாரா கூறியுள்ளார்.

"மும்பை அணி கோப்பையை வெல்வது கடினம் " - மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் லாரா கருத்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் பரிமாற்ற முறையில் குஜராத் அணியின் வெற்றிகரமான கேப்டனாக வளம்வந்த ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு செல்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், மும்பை அணிக்கு வந்ததும் கேப்டனாக்கப்பட்டதால் அந்த அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, சூரியகுமார், பும்ரா ஆகியோர் ஹர்தீக் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. மேலும், ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்களும் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற குஜராத் - மும்பை அணிகளுக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் கிண்டல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் மும்பை அணியின் சொந்த மைதானமான வான்கடேவில் நடைபெற்ற போட்டியில் சொந்த அணியின் ரசிகர்களாலேயே ஹர்திக் பாண்டியா கிண்டலுக்கு உள்ளாகினார்.

"மும்பை அணி கோப்பையை வெல்வது கடினம் " - மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் லாரா கருத்து !

அதுமட்டுமின்றி மும்பை இந்தியன்ஸ் அணி இந்த தொடரில் மோசமான செயல்பாட்டையே தற்போது வெளிப்படுத்தி வருகிறது. மேலும் கேப்டன் விவகாரத்தால் அந்த அணி வீரர்களிடையே ஒற்றுமை இல்லாததும் பகிரங்கமாக வெளியே தெரிகிறது. இந்த நிலையில்,இந்த தொடரில் மும்பை அணி கோப்பையை வெல்வது கடினம் என மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஜாம்பவான் லாரா கூறியுள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், "நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை பலரும் அவர்களை கோப்பையை வெல்லக்கூடிய அணியாக பார்க்கின்றனர். அதற்கான காரணம் மும்பை அணியின் பேட்டிங்காக தான் இருக்கும். ஆனால், அந்த அணியின் பேட்டிங்கை கண்டு ரசிகர்களைப் போல நானும் ஏமாற்றம் அடைந்தேன்.

மும்பை அணியில் பும்ரா ஒருவரை தவிர வேறு யாரும் சிறப்பாக வீசவில்லை. இப்படி போனால் இந்த தொடரில் மும்பை அணி கோப்பையை வெல்வது கடினம் . அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டிய விரைவாக அணியில் இருக்கும் மிக சிறந்த பவுலர்களை அடுத்தடுத்த போட்டிகளில் கண்டு புடிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories