விளையாட்டு

ஹைதராபாத் அணிக்கு மரண பயத்தை காட்டிய தினேஷ் கார்த்திக் : மைதானமே தலைவணங்கிய Goosebumps தருணம் !

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், தனி ஒருவனாக போராடிய பெங்களுரு வீரர் தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஹைதராபாத் அணிக்கு மரண பயத்தை காட்டிய தினேஷ் கார்த்திக் : மைதானமே தலைவணங்கிய Goosebumps தருணம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அணியில் இடம்பெறாத காரணத்தால் வர்ணனையாளராக செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.

ஆனால் கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக பினிஷராக செயல்பட்டு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக அடுத்து வந்த டி 20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றார்.

ஆனால், அதன்பின்னர் அவருக்கு அணியில் இடம் மறுக்கப்பட்டது, எனினும் விஜய் ஹசாரே தொடரில் பங்கேற்ற அவர், தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் இடம்பிடித் ஆடி வருகிறார்.

பெங்களுரு அணி தொடர்ந்து தோல்வியைத் தழுவி வரும் நிலையிலும், அந்த அணிக்கு தினேஷ் கார்த்திக் மட்டும் சிறப்பாக ஆடி வருகிறது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், தனி ஒருவனாக போராடிய தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 287 ரன்கள் குவித்து ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற தனது சாதனையை தானே முறியடித்தது. பின்னர் ஆடிய பெங்களுரு அணியில் மத்திய வரிசை வீரர்கள் குறைவான ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதனால் பெங்களூரு அணி தோல்வி என்று கருதப்பட்ட நிலையில், அபாரமாக ஆடிய தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் 83 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரின் இந்த அதிரடி ஆட்டம் காரணமாக இமாலய தோல்வியை தவிர்த்த பெங்களூரு அணி 262 ரன்கள் குவித்து இலக்கை எட்டுவதில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் என்ற சாதனையை படைத்தது. அபாரமாக ஆடிய தினேஷ் கார்த்திக்கை பலரும் பாராட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories