விளையாட்டு

"அனைத்து அணிகளும் ரோஹித் சர்மாவை கேப்டனாக்க விரும்புவார்கள்" - அம்பதி ராயுடு கருத்து !

அனைத்து அணிகளும் ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிப்பதை நிச்சயமாக விரும்புவார்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ராயுடு கூறியுள்ளார்.

"அனைத்து அணிகளும் ரோஹித் சர்மாவை கேப்டனாக்க விரும்புவார்கள்" - அம்பதி ராயுடு கருத்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் பரிமாற்ற முறையில் குஜராத் அணியின் வெற்றிகரமான கேப்டனாக வளன்வந்த ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு செல்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மும்பை அணிக்கு வந்ததும் கேப்டனாக்கப்பட்டதால் அந்த அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, சூரியகுமார், பும்ரா ஆகியோர் ஹர்தீக் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. மேலும், ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்களும் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற குஜராத் - மும்பை அணிகளுக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் கிண்டல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போட்டி தொடங்கும் நேரத்தில், ஒலிபெருக்கியில் ஹர்திக் பாண்டியாவின் பெயர் அறிவிக்கப்பட்டபோது ரசிகர்கள் பூ என கிண்டல் செய்யும் விதமாக கோஷமெழுப்பினர்.

அப்போது இது குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி ஹர்திக் பாண்டியா மும்பைக்கு வரும்போது இன்னும் அதிகமாக கிண்டல் செய்யப்படுவார் என கூறியிருந்தார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக மும்பை அணியின் சொந்த மைதானமான வான்கடேவில் நடைபெற்ற போட்டியில் சொந்த அணியின் ரசிகர்களாலேயே ஹர்திக் பாண்டியா கிண்டலுக்கு உள்ளாகினார்.

"அனைத்து அணிகளும் ரோஹித் சர்மாவை கேப்டனாக்க விரும்புவார்கள்" - அம்பதி ராயுடு கருத்து !

மேலும், இந்த தொடருக்கு பின்னர் ரோஹித் சர்மா வேறு அணிக்கு செல்லவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், அனைத்து அணிகளும் ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிப்பதை நிச்சயமாக விரும்புவார்கள் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ராயுடு கூறியுள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், "ரோஹித் சர்மா குறித்து நாம் நாம் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் இறுதி முடிவை அவர்தான் எடுப்பார்.ரோஹித் சர்மா விரும்பினால் அவர் எந்த அணிக்கு வேண்டுமானாலும் செல்லலாம். அனைத்து அணிகளும் அவரை கேப்டனாக நியமிப்பதை நிச்சயமாக விரும்புவார்கள்.

மும்பை அணியில் தற்போது நடந்தது போல் இல்லாமல் மற்ற அணிகள் ரோஹித் சர்மாவை சரியாகக் கையாளும் விதத்தில், அவர் நிச்சயமாக வேறு அணிக்குச் செல்வார். ஆனால், இது குறித்த முடிவை ரோஹித் சர்மாதான் எடுப்பார்"என்றார் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories