விளையாட்டு

தோனியின் கீழ் ஜாம்பவான்கள் விளையாடவில்லையா ? - ஹர்திக் பாண்டியா விவகாரத்தில் அஸ்வின் கண்டனம் !

ஐபிஎல் தொடரில் நடைபெறும் FAN WAR சம்பவங்களுக்கு இந்திய அணி வீரர் அஸ்வின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தோனியின் கீழ் ஜாம்பவான்கள் விளையாடவில்லையா ? - ஹர்திக் பாண்டியா விவகாரத்தில் அஸ்வின் கண்டனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2021-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் புதிதாக களமிறக்கப்பட்டன. இதில் லக்னோ அணிக்கு கே.எல்.ராகுலும், குஜராத் அணிக்கு ஹர்திக் பாண்டியாவும் கேப்டனாக அறிவிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து தனது முதல் ஐபிஎல் தொடரிலேயே அபாரமாக செயல்பட்ட குஜராத் அணி பங்கேற்ற முதல் தொடரிலேயே கோப்பையை வென்று அதிரவைத்தது. மேலும், கடந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறிய அந்த அணி சென்னை அணியிடம் கோப்பையை பறிகொடுத்தது.

குஜராத் அணியின் இந்த வெற்றிக்கு அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முக்கிய காரணமாக இருந்தார். இந்த சூழலில் நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் பரிமாற்ற முறையில் ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு செல்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மும்பை அணிக்கு வந்ததும் கேப்டனாக்கப்பட்டதால் அந்த அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, சூரியகுமார், பும்ரா ஆகியோர் ஹர்தீக் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. மேலும், ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்களும் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.

தோனியின் கீழ் ஜாம்பவான்கள் விளையாடவில்லையா ? - ஹர்திக் பாண்டியா விவகாரத்தில் அஸ்வின் கண்டனம் !

இதனைத் தொடர்ந்து குஜராத் - மும்பை அணிகளுக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் கிண்டல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போட்டி தொடங்கும் நேரத்தில், ஒலிபெருக்கியில் ஹர்திக் பாண்டியாவின் பெயர் அறிவிக்கப்பட்டபோது ரசிகர்கள் பூ என கிண்டல் செய்யும் விதமாக கோஷமெழுப்பினர்.

இந்த நிலையில், இந்த சம்பவத்துக்கு இந்திய அணி வீரர் அஸ்வின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர் , "இந்தியாவில் FAN WAR எனப்படும் ரசிகர்கள் மோதல் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் சொந்த அணி வீரர்களின் ரசிகர்கள் சண்டை போட்டு நான் பார்த்ததில்லை. இது போன்ற நிகழ்வுகள் இந்தியாவில் மட்டுமே நடைபெறுகிறது.

இளம்வீரர்களின் கீழ் இந்திய ஜாம்பவான்கள் விளையாடியுள்ளனர் .கங்குலி கேப்டன்சியின் கீழ் சச்சின் விளையாடவில்லையா? ராகுல் டிராவிட் கேப்டன்சியில் கங்குலி, சச்சின் விளையாடவில்லையா? தோனி கேப்டன்சியின் கீழ் எல்லா கிரிக்கெட் ஜாம்பவான்களும் விளையாடினர். பின்னர் விராட் கோலியின் கீழ் தோனியும் விளையாடினார்"என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories