விளையாட்டு

"சேப்பாக்கத்தில் இதுவே எனது கடைசி போட்டி" - ஓய்வு குறித்து தினேஷ் கார்த்திக் கூறியது என்ன ?

சென்னை அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் பேசிய தினேஷ் கார்த்திக், இதுவே எனது கடைசி போட்டியாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

"சேப்பாக்கத்தில் இதுவே எனது கடைசி போட்டி" - ஓய்வு குறித்து தினேஷ் கார்த்திக் கூறியது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அணியில் இடம்பெறாத காரணத்தால் வர்ணனையாளராக செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.

ஆனால் கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக பினிஷராக செயல்பட்டு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக அடுத்து வந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

அதில் சிறப்பாக செயல்பட்ட அவர் அணியில் தனது இடத்தை உறுதி படுத்திக்கொண்டதோடு டி 20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றார். ஆனால், அதன்பின்னர் அவருக்கு அணியில் இடம் மறுக்கப்பட்டது, எனினும் விஜய் ஹசாரே தொடரில் பங்கேற்ற அவர், தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் இடம்பிடித்துள்ளார்.

"சேப்பாக்கத்தில் இதுவே எனது கடைசி போட்டி" - ஓய்வு குறித்து தினேஷ் கார்த்திக் கூறியது என்ன ?

நேற்று சேப்பாக்கத்தில் சென்னை அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் பேசிய தினேஷ் கார்த்திக், இதுவே எனது கடைசி போட்டியாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். இந்த ஆண்டோடு தினேஷ் கார்த்திக் ஓய்வு பெறப்போவதாக செய்திகள் வெளியான நிலையில், அவரிடம் சேப்பாக்காத்தில் நீங்கள் ஆடும் கடைசிப் போட்டி இதுதானா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், " ப்ளே ஆஃப் போட்டிகளில் சில சென்னையில் நடத்தப்படும் என்று தெரிகிறது. அப்படி இருக்கும்பட்சத்தில் இது இங்கே என்னுடைய கடைசி போட்டியாக இருக்கக் கூடாது என நான் விரும்புகிறேன். ப்ளே ஆப்ஸூக்கு நாங்கள் செல்லும்பட்சத்தில் அதுவே என்னுடைய கடைசி சேப்பாக்கம் போட்டியாக இருக்கலாம். அது சாத்தியப்படவில்லையெனில் இதுவே எனது கடைசி போட்டியாக இருக்கலாம்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories