விளையாட்டு

"IPL தொடருக்கென எனக்கு தனியே செயல் திட்டம் இல்லை, தோனி பார்த்துக்கொள்வார்" - ஷர்துல் தாகூர் கருத்து !

அனைவருக்கும் முழு சுதந்திரத்தைக் கொடுத்து அவர்களின் திறனை முன்னேற்ற தோனி உதவுவார் என இந்திய அணி வீரர் ஷர்துல் தாகூர் கூறியுள்ளார்.

"IPL தொடருக்கென எனக்கு தனியே  செயல் திட்டம் இல்லை, தோனி பார்த்துக்கொள்வார்" - ஷர்துல் தாகூர் கருத்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய அணி 1983-ம் வருடம் முதல் முறையாக கிரிக்கெட் உலககோப்பையை வென்றது. அதன் பின்னர் பல வருடங்களாக உலககோப்பையையே வெல்லாத நிலையில், இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார் எம்.எஸ்.தோனி.

அதன்பின்னர் 2011 உலககோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பை என தோனிகேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது. மேலும், மைதானத்தில் எந்தவித ஆக்ரோஷத்தையும் காட்டாமல் களத்தில் தனது பேட்டால் பதிலடி கொடுப்பார். இதனாலேயே இவரை இந்திய ரசிகர்களைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார்.

அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் சென்னை அணியை வழிநடத்தி வருகிறார். மேலும், கடந்த 2008-ம் ஆண்டு ஐபிஎல் முதல்முறை தொடங்கப்பட்டதில் இருந்து தற்போது வரை கேப்டனாக இருக்கும் ஒரே வீரராகவும் திகழ்ந்து வருகிறார். இவரது கேப்டன்சியின் கீழ் சென்னை அணி ஐபிஎல் வரலாற்றிலேயே வெற்றிகரமான அணியாக திகழ்ந்து வருகிறது.

"IPL தொடருக்கென எனக்கு தனியே  செயல் திட்டம் இல்லை, தோனி பார்த்துக்கொள்வார்" - ஷர்துல் தாகூர் கருத்து !

வேறு அணிகளில் மோசமாக ஆடும் வீரர்கள் கூட தோனி தலைமையிலான சென்னை அணிக்கு வந்தால் சிறப்பாக ஆடுவது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. மேலும், இளம்வீரர்களும் தோனி தொடர்ந்து அறிவுரை கூறுவதால் சென்னை அணியில் ஆட பல்வேறு வீரர்களும் விரும்புவர்.

இந்த நிலையில், அனைவருக்கும் முழு சுதந்திரத்தைக் கொடுத்து அவர்களின் திறனை முன்னேற்ற தோனி உதவுவார் என இந்திய அணி வீரர் ஷர்துல் தாகூர் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், " இந்த ஆண்டு சென்னை அணிக்காக நான் ஆடவுள்ளேன். இந்த ஆண்டுக்கு என தனியே செயல் திட்டம் எதுவும் என்னிடம் இல்லை.

தோனி அணியில் இருக்கிறார். அவர் தலைமையின் நான் மீண்டும் விளையாட உற்சாகமாக உள்ளேன்.அவர் ஸ்டம்புகளுக்கு பின்னால் நின்றுகொண்டு வீரர்களை சிறப்பாக வழிநடத்துவார். அனைவருக்கும் முழு சுதந்திரத்தைக் கொடுத்து அவர்களின் திறனை முன்னேற்ற உதவுவார். தோனி மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர். அவரிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முயற்சிப்பேன்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories