விளையாட்டு

"மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ரோஹித் விவகாரத்தில் இப்படி செய்திருக்கக்கூடாது" -யுவராஜ் சிங் விமர்சனம்!

மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் கேப்டனாக இன்னும் ஒரு சீசன் ரோஹித் சர்மாவை ஆட வைத்திருக்கவேண்டும் என முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

"மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ரோஹித் விவகாரத்தில் இப்படி செய்திருக்கக்கூடாது" -யுவராஜ் சிங் விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2021-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் புதிதாக களமிறக்கப்பட்டன. இதில் லக்னோ அணிக்கு கே.எல்.ராகுலும், குஜராத் அணிக்கு ஹர்திக் பாண்டியாவும் கேப்டனாக அறிவிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து தனது முதல் ஐபிஎல் தொடரிலேயே அபாரமாக செயல்பட்ட குஜராத் அணி பங்கேற்ற முதல் தொடரிலேயே கோப்பையை வென்று அதிரவைத்தது. மேலும், கடந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறிய அந்த அணி சென்னை அணியிடம் கோப்பையை பறிகொடுத்தது.

குஜராத் அணியின் இந்த வெற்றிக்கு அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முக்கிய காரணமாக கருதப்பட்டார். இதனிடையே நடப்பு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வீரர்கள் பரிமாற்ற முறையில் ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு செல்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

"மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ரோஹித் விவகாரத்தில் இப்படி செய்திருக்கக்கூடாது" -யுவராஜ் சிங் விமர்சனம்!

அதனைத் தொடர்ந்து மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்பட்டார். ரோஹித் சர்மா வரும் முன்னர் மும்பை அணி ஒரு கோப்பையை கூட வெல்லாத நிலையில், அந்த அணிக்கு 5 கோப்பைகளை ரோஹித் வென்றுகொடுத்தார். ஆனால், அப்படிப்பட்ட வீரர் இந்திய அணியின் கேப்டனாக இருக்கும்போதே ஐபிஎல் தொடரில் இருந்து கேப்டனாக நீக்கப்பட்டது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதோடு இந்த விவகாரத்தால் மும்பை அணியின் சீனியர் வீரர்களான பும்ரா, சூரியகுமார் ஆகியோரும் ஹர்திக் பாண்டியா மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், கேப்டனாக இன்னும் ஒரு சீசன் ரோஹித் சர்மாவை ஆட வைத்திருக்கவேண்டும் என முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர் , " ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான கேப்டன். அவர் மும்பை அணிக்காக 5 முறை கோப்பைகளை வென்று கொடுத்திருக்கிறார்.

முன்பை அணி நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவை உள்ளே கொண்டு வந்ததுபோல நானும் ஏதாவது வீரர்களை கொண்டு வந்திருப்பேன்.ஆனால் கேப்டனாக இன்னும் ஒரு சீசன் ரோஹித் சர்மாவை ஆட வைத்துவிட்டு, ஹர்திக் பாண்டியாவை துணை கேப்டனாக வைத்திருப்பேன். இது மொத்தமாக சிறப்பானதாக அமைந்திருக்கும். மும்பை அணி நிர்வாகத்தின் பார்வையில் இருந்து பார்க்கும் போது, இந்த முடிவிற்கு பின்னால் இருக்கும் காரணங்கள் புரிகிறது. ஆனால் ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதனை மறக்கக் கூடாது" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories