விளையாட்டு

"bazball பின்னால் ஒளிந்துகொள்ள வேண்டாம், அஸ்வினிடம் கற்றுக்கொள்ளுங்கள்" -இங். முன்னாள் கேப்டன் அறிவுரை !

bazball முறைக்கு பின்னால் இங்கிலாந்து வீரர்கள் ஒளிந்துகொள்ள வேண்டாம் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நசீர் ஹுசைன் கூறியுள்ளார்.

"bazball பின்னால் ஒளிந்துகொள்ள வேண்டாம், அஸ்வினிடம்  கற்றுக்கொள்ளுங்கள்" -இங். முன்னாள் கேப்டன் அறிவுரை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2022ம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கட் அணியின் பயிற்சியாளராக ப்ரென்டன் மெக்கலமும், அணி கேப்டனாக பென் ஸ்டோக்ஸும் நியமிக்கப்பட்டனர். அதன்பின்னர் இயான் மார்கன் ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகப்படுத்தி உலகக்கோப்பையை வெல்ல காரணமாக இருந்த அட்டாக்கிங் கேமை டெஸ்ட்டிலும் அறிமுகப்படுத்தினர்.

இவர்களின் இந்த புதிய பரிமாணம் bazball என அழைக்கப்பட்டது. இந்த முறையில் நியூஸிலாந்து, இந்தியா போன்ற அணிகளை சொந்த மண்ணில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆஷஸ் தொடரில் bazball முறையில் அதிரடியாக ஆடி அந்த தொடரை 2-2 என்று சமநிலைக்கு கொண்டுவந்தது.

பின்னர் பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரையும் bazball முறையில் ஆடி இங்கிலாந்து அணி வென்றது. இதனால் அடுத்து வரும் இந்திய தொடரிலும் bazball முறை தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. ஆனால், அடுத்த மூன்று போட்டிகளிலும் மோசமான முறையில் ஆடி இங்கிலாந்து அணி தோல்வியை சந்தித்தது.

"bazball பின்னால் ஒளிந்துகொள்ள வேண்டாம், அஸ்வினிடம்  கற்றுக்கொள்ளுங்கள்" -இங். முன்னாள் கேப்டன் அறிவுரை !

இந்த நிலையில், bazball முறைக்கு பின்னால் இங்கிலாந்து வீரர்கள் ஒளிந்துகொள்ள வேண்டாம் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நசீர் ஹுசைன் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "ஜாக் கிராவ்லி தொடர்ச்சியாக ரன்கள் அடித்து ஆட்டமிழந்து விடுகிறார். பேர்ஸ்டோ ஒவ்வொரு முறையும் அதிரடியாக விளையாட முயற்சித்து 20 – 30 ரன்களில் ஆட்டமிழக்கிறார். பென் ஸ்டோக்ஸ் இந்த தொடர் முழுவதும் தடுமாறுகிறார்.

இந்த சுற்றுப்பயணத்தின் முடிவில் அனைத்து வீரர்களும் தங்களை பார்த்து bazball மனநிலையின் பின்னால் ஒளிந்து கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்திருப்பார்கள் என நம்புகிறேன். சொந்த விளையாட்டை முன்னேற்ற முயற்சியுங்கள். சிறந்த வீரராக ஆடுவது சொந்த சிந்தனையைப் பொறுத்தது. 100 போட்டிகளில் விளையாடிய பின்பும் எப்போதும் தன்னை மேம்படுத்திக் கொள்ள விரும்பும் அஸ்வினை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories