விளையாட்டு

ரஞ்சி கோப்பை தோல்வி : தமிழ்நாடு கேப்டனை விமர்சித்த மும்பை பயிற்சியாளர் - கொதித்தெழுந்த முன்னாள் வீரர்கள்!

ரஞ்சி கோப்பை தோல்வி : தமிழ்நாடு கேப்டனை விமர்சித்த மும்பை பயிற்சியாளர் - கொதித்தெழுந்த முன்னாள் வீரர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உள்நாட்டில் நடக்கும் புகழ்பெற்ற ரஞ்சி தொடர் நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. எப்போதுமே 50 ஓவர் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் தொடர்ந்து அசத்தும் தமிழ்நாடு அணி ரஞ்சி தொடரில் தொடர்ந்து மோசமான செயல்பாட்டையே தந்து வருகிறது.

அதிலும் கடந்த 6 ஆண்டுகளாக காலிறுதிக்கு கூட செல்லாமல் லீக் சுற்றோடு வெளியேறியது. இதன் காரணமாக தமிழ்நாடு அணியை பலரும் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில், சாய் கிஷோர் தலைமையில் இளம் வீரர்கள் அடங்கிய தமிழ்நாடு அணி ரஞ்சி கோப்பையில் பங்கேற்றது

இதில் லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாடு அணி 6 ஆண்டுகளுக்கு பிறகு காலிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்தது. தொடர்ந்து காலிறுதியில் சௌராஸ்டிரா அணியை வீழ்த்தி அரையிறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. ஆனால் அரையிறுதி போட்டியில் மும்பை அணிக்கு எதிராக தோல்வியைத் தழுவியது.

ரஞ்சி கோப்பை தோல்வி : தமிழ்நாடு கேப்டனை விமர்சித்த மும்பை பயிற்சியாளர் - கொதித்தெழுந்த முன்னாள் வீரர்கள்!

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மும்பையை சேர்ந்த தமிழ்நாடு அணி பயிற்சியாளர் சுலக்ஷன் குல்கர்னி தமிழ்நாடு அணியின் கேப்டன் சாய் கிஷோர் தான் இந்த தோல்விக்கு காரணம் என்றும், அவர்தான் தன்னிச்சையாக டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார் என்றும் கூறியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

இது குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரர் ஹேமந்த் பதானி, "அணியில் என்ன நடந்தாலும் அது வெளியில் வரக் கூடாது. கேப்டன் மீது பழியை போடக் கூடாது. நல்ல பயிறசியாளர்கள் அதை செய்ய மாட்டார்கள்" என்று கூறியுள்ளார். அதேபோல மற்றொரு வீரர் தினேஷ் கார்த்திக், "ஏழு ஆண்டுகளுக்கு பின் தமிழ்நாடு அணியை அரை இறுதி வரை அழைத்துச் சென்ற சாய் கிஷோரை பற்றி நல்லவிதமாக பேசாமல் இப்படி பேசி இருப்பது பெரிய தவறு" என கூறி இருந்தார். இது அனைத்துக்கும் உச்சகட்டமாக முன்னாள் இந்திய அணி வீரர் ஸ்ரீகாந்த், "இனி தமிழ்நாடு அணிக்கு வெளிமாநிலத்தில் இருந்து பயிற்சியாளர்களை நியமிக்கக் கூடாது" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories