விளையாட்டு

கால்பந்தின் அடுத்த சூப்பர் ஸ்டார் : எம்பாப்பேக்கு போட்டி போடும் கிளப்கள்- ரூ.1,345 கோடிக்கு ஒப்பந்தம் ?

கால்பந்தின் அடுத்த சூப்பர் ஸ்டார் எம்பாப்பேக்கு போட்டி போடும் கிளப்கள்.

கால்பந்தின் அடுத்த சூப்பர் ஸ்டார் : எம்பாப்பேக்கு போட்டி போடும் கிளப்கள்- ரூ.1,345 கோடிக்கு ஒப்பந்தம் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2022- ஆண்டு டிசம்பர் மாதம் கத்தாரில் FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடர் நடைபெற்றது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜெண்டினாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை 4-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா அணி வென்று 36 ஆண்டுகளுக்கு பின்னர் உலகக்கோப்பையை கைப்பற்றியது.

இந்த இறுதி போட்டியில் வென்ற மெஸ்ஸி உலகளவில் கொண்டாடப்பட்டாலும் இறுதிப்போட்டியில் ஹட் ட்ரிக் கோல் அடித்து அதிக கோல் அடித்தவருக்கான தங்க காலணி விருதை வென்ற கைலியன் எம்பாப்பே அதிகம் கவனிக்கப்பட்டார். மெஸ்ஸி -ரொனால்டோவின் காலத்துக்கு பின் அடுத்த உலக சூப்பர் ஸ்டாராக கைலியன் எம்பாப்பே வருவார் என கால்பந்து வல்லுநர்கள் முத்திரை குத்தினர்.

தற்போது 25 வயதாகும் கைலியன் எம்பாப்பே ஏற்கனவே 2018-ம் ஆண்டில் உலகக்கோப்பையை வென்ற பிரான்ஸ் அணியில் இடம்பிடித்திருந்தார். மேலும் மிக இளவயதான எம்பாப்பேயை பிரான்ஸ் கால்பந்து கூட்டமைப்பு பிரான்ஸ் அணியின் கேப்டனாக நியமித்தும் அதிரவைத்தது.

கால்பந்தின் அடுத்த சூப்பர் ஸ்டார் : எம்பாப்பேக்கு போட்டி போடும் கிளப்கள்- ரூ.1,345 கோடிக்கு ஒப்பந்தம் ?

தற்போதைய நிலையில் உலகின் அதிக மதிப்பு மிக்க வீரராக இருக்கும் கைலியன் எம்பாப்பே பிரான்சின் புகழ்பெற்ற பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்(PSG ) அணிக்காக விளையாடி வருகிறார். அவரின் கிளப் ஒப்பந்தம் இந்த ஆண்டோடு முடிவடையவுள்ள நிலையில், அவர் அந்த அணியில் தொடருவாரா அல்லது வேறு அணியில் இணைவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு அவருக்கும், கிளப் நிர்வாகத்துக்கும் இடையே பிரச்சனை எழுந்த நிலையில், இந்த ஆண்டு அவர் PSG கிளப்பில் இருந்து விலகுவது உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் அடுத்ததாக இணையும் கிளப் எது என்பது குறித்த விவாதம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டே ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் கிளப் அவரை வாங்க முயன்ற நிலையில், இந்த ஆண்டும் அவர் இது குறித்த செய்திகள் வெளியாகியுள்ளது.

கால்பந்தின் அடுத்த சூப்பர் ஸ்டார் : எம்பாப்பேக்கு போட்டி போடும் கிளப்கள்- ரூ.1,345 கோடிக்கு ஒப்பந்தம் ?

ரியல் மாட்ரிட் கிளப் எம்பாப்பேயை இந்திய மதிப்பில் 1,345 கோடிக்கு 5 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்ய முன்வந்ததாக முன்னணி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதாவது ஆண்டுக்கு 134 கோடி அவருக்கு கிடைக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது.

அதே நேரம் ரியல் மாட்ரிட் கிளப்பின் பரம போட்டியாளரான பார்சிலோனா கிளப் நிர்வாகவும் எம்பாப்பேயை தொடர்பு கொண்டதாகவும், அதனால் எம்பாப்பே பார்சிலோனா கிளப்பில் இணையவும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. PSG கிளப்பில் எம்பாப்பேயுடன் ஆடிய மெஸ்ஸியும் பார்சிலோனா அல்லது ரியல் மாட்ரிட் கிளப்பில் இணைய எம்பாப்பேவுக்கு ஆலோசனை கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories