விளையாட்டு

"ஜெய்ஸ்வால் உங்களிடமிருந்து அதிரடியை கற்றுக்கொள்ளவில்லை" - இங்கி. வீரரை விமர்சித்த நாசர் ஹுசைன் !

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன், ஜெய்ஸ்வால் இங்கிலாந்திடமிருந்து உங்களிடமிருந்து அதிரடியை கற்றுக்கொள்ளவில்லை என்று விமர்சித்துள்ளார்.

"ஜெய்ஸ்வால் உங்களிடமிருந்து அதிரடியை கற்றுக்கொள்ளவில்லை" - இங்கி. வீரரை விமர்சித்த நாசர் ஹுசைன் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. அதனைத் தொடர்ந்து சற்று இடைவெளிக்கு பிறகு முன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது.

இந்த போட்டியின் இரண்டாவது சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாசினார். இந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியில் ஜெய்ஸ்வாலின் ஆட்டம் குறித்துப் பேசிய இங்கிலாந்து துவக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் "தங்களிடம் விளையாடும் எதிரணி வீரர்கள் அதிரடியாக விளையாடுவதற்கு தாங்கள்தான் காரணம்.அதற்கான கிரெடிட் தங்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் " என்று கூறியிருந்தார்.

"ஜெய்ஸ்வால் உங்களிடமிருந்து அதிரடியை கற்றுக்கொள்ளவில்லை" - இங்கி. வீரரை விமர்சித்த நாசர் ஹுசைன் !

அவரின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன், ஜெய்ஸ்வால் உங்களிடமிருந்து அதிரடியை கற்றுக்கொள்ளவில்லை என்று விமர்சித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், "ஜெய்ஸ்வாலின் வளர்ப்பே அப்படியானதுதான். அவர் உங்களிடமிருந்து ஆக்ரோஷமாக ஆடக் கற்றுக் கொள்ளவில்லை. கடுமையான நிலையில் இருந்து அவர் வளர்ந்துள்ளார். அவரிடமிருந்து மற்றவர்கள் எதையாவது கற்றுக்கொள்ள விரும்பினால் இதனை கற்றுக்கொள்ளட்டும்.

இங்கிலாந்து வீரர்கள் கொஞ்சம் சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டும். இல்லையெனில் இந்த ‘பாஸ்பால்’ ஒரு வழிபாடாகவே மாறிவிடும் என்று நினைக்கிறேன். ஒரு வேலை இப்படி நடந்தால் வெளியிலிருந்தும், உள்ளிருந்தும் வரும் விமர்சனங்களை எதுவுமே செய்ய முடியாது" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories