விளையாட்டு

8-ம் இடத்திலிருந்து 2-ம் இடம் : கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாடு வரலாற்று சாதனை !

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி தொடர் வரலாற்றில் முதல் முறையாக பதக்க பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

8-ம் இடத்திலிருந்து 2-ம் இடம் : கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாடு வரலாற்று சாதனை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் விளையாட்டு துறையிலும் தமிழ்நாட்டை முன்னிலைக்கு கொண்டுசெல்ல பல்வேறு முயற்சிகள் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக உலகமே வியக்கும் வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ்ஷிப் போட்டியும் சென்னையில் வெகுசிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், தற்போது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை நடத்தும் வாய்ப்பு தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ளது.

அதன்படி கடந்த 19-ம் தேதி சென்னை நேரு விளையாட்டு அரங்கில், கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் தொடங்கியது. கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் தமிழ் நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நடைபெற்ற இந்த போட்டி தொடர் இன்று முடிவுக்கு வந்தது.

8-ம் இடத்திலிருந்து 2-ம் இடம் : கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாடு வரலாற்று சாதனை !

இந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி தொடர் வரலாற்றில் முதல் முறையாக பதக்க பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு 8-ம் இடத்தை தமிழ்நாடு பெற்ற நிலையில், சொந்த மண்ணில் நடைபெற்ற இந்தாண்டு தொடரில் 2ம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.

தமிழ்நாடு 38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 97 பதக்கங்களோடு இரண்டாம் இடத்தை பிடித்தது. 56 தங்கம், 48 வெள்ளி, 53 வெண்கலம் என 156 பதக்கங்களுடன் மகாராஷ்டிரா அணி முதலிடத்தை பெற்ற நிலையில், 35 தங்கம், 22 வெள்ளி, 46 வெண்கலம் என மொத்தம் 103 பதக்கங்களை வென்று ஹரியானா அணி 3ம் இடத்தை பெற்றுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் 88 பதக்கங்களை வென்று 5ம் இடத்தை பெற்றதே தமிழ்நாட்டின் அதிகபட்ச சாதனையாக இருந்த நிலையில், அதனை இந்தாண்டு முறியடித்து தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது.

banner

Related Stories

Related Stories