விளையாட்டு

சிவம் துபே - ஜெய்ஸ்வால் அதிரடி : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரை வென்ற இந்திய அணி !

இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது.

சிவம் துபே - ஜெய்ஸ்வால் அதிரடி : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரை வென்ற இந்திய அணி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. அதனைத் தொடர்ந்து டி20 உலகக்கோப்பை நடைபெறும் நிலையில், அதற்கான அணி தேர்வில் இந்திய அணி நிர்வாகம் தீவிரமாக உள்ளது.

தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றுவரும் நிலையில், இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதே போல ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட சிவம் துபேவுக்கும் அணியில் இடம்கிடைத்துள்ளது.

இதில் முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், நேற்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் படி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவா்களில் 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

சிவம் துபே - ஜெய்ஸ்வால் அதிரடி : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரை வென்ற இந்திய அணி !

இந்திய தரப்பில், அா்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், அக்ஸா் படேல் ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்னர் ஆடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா டக் அவுட்டானார். பின்னர் கோலியும் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

எனினும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்-சிவம் துபே இணைந்து அதிரடியாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. ஜெய்ஸ்வால் 34 பந்துகளில் 68 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். எனினும் கடைசி வரை களத்தில் இருந்த சிவம் துபே 32 பந்துகளில் 63 ரன்களை விளாசி அணியை வெற்றிபெற வைத்தார்.

15.4 ஓவா்களிலேயே இந்திய அணி இலக்கை எட்டிய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது. இந்த போட்டியில் 4 ஓவர்களில் 17 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்திய அக்ஸா் படேலுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

banner

Related Stories

Related Stories