விளையாட்டு

"அவங்க இங்க வருவாங்க, வந்து குற்றமா சொல்லுவாங்க பாருங்க" - வெளிநாட்டு அணியை விமர்சித்த சுனில் கவாஸ்கர் !

"அவங்க இங்க வருவாங்க, வந்து குற்றமா சொல்லுவாங்க பாருங்க" - வெளிநாட்டு அணியை விமர்சித்த சுனில் கவாஸ்கர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி சென்சூரியன் நகரில் நடைபெற்றது. இதில் மோசமாக ஆடிய இந்திய அணி மூன்றே நாளில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. விராட் கோலி, கே.எல்.ராகுல், பும்ரா மட்டுமே அணிக்கு பங்களிப்பு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து கேப் டவுனில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் ஆடிய தென்னாபிரிக்க அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 55 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. பின்னர் ஆடிய இந்திய அணி 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிலும் கடைசி 6 விக்கெட்டுகளை ஒரு ரன் கூட எடுக்காமல் இழந்தது.

பின்னர் 2-வது இன்னிங்க்ஸை ஆடிய தென்னாபிரிக்க அணி 176 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணியின் வெற்றிக்கு 78 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாத்தில் அபார வெற்றி பெற்றது.

"அவங்க இங்க வருவாங்க, வந்து குற்றமா சொல்லுவாங்க பாருங்க" - வெளிநாட்டு அணியை விமர்சித்த சுனில் கவாஸ்கர் !

இதன் மூலம் 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. கேப் டவுனில் நடைபெற்ற இரண்டாவது போட்டி, ஒன்றரை நாளில் முடிந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியில் 4 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 642 பந்துகள் மட்டுமே வீசப்பட்டுள்ளது.இதன் மூலம் வரலாற்றில் குறைவான நேரத்தில் முடிந்த போட்டி என்னும் மோசமான சாதனையை படைத்துள்ளது.

வழக்கமாக 3 நாளில் துணை கண்ட மைதானங்களில் போட்டிகள் முடிந்தாலே அதனை குழி பிட்ச் என விமர்சிக்கும் வெளிநாட்டு மீடியாக்கள் கேப் டவுண் மைதானம் குறித்து எந்த விமரிசனத்தையும் தெரிவிக்கவில்லை. இதனை குறிப்பிட்டு பலரும் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரும் இதனை குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.

"அவங்க இங்க வருவாங்க, வந்து குற்றமா சொல்லுவாங்க பாருங்க" - வெளிநாட்டு அணியை விமர்சித்த சுனில் கவாஸ்கர் !

இது குறித்து பேசிய அவர், "இந்திய மைதான ஊழியர்கள் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக மைதானத்தை தயார் செய்தால் அது ஏமாற்று வேலை, வேண்டுமென்றே அப்படி செய்தார்கள் என்று கூறுவார்கள். ஆனால், அவர்களுடைய ஊழியர்கள் அதை செய்தால் அவர்கள் தவறாக பிட்ச்சை தயார் செய்து இருக்கிறார்கள் என்பார்கள்.

இன்னும் சில வாரங்களில் ஒரு நாட்டுடன் டெஸ்ட் தொடர் துவங்க உள்ளது. அந்த நாட்டின் ஊடகங்கள் தான் விளையாட்டில் முனகல் போக்கை கொண்டது. அந்த நாட்டின் அணிக்கு ஒத்துவராத விஷயம் அனைத்தும் பெரிய குற்றமாக சொல்வார்கள்" என கூறியுள்ளார். விரைவில் இந்தியாவுக்கு இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அதனை குறிப்பிட்டே அந்த அணியை கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories