விளையாட்டு

ஆண்டில் அதிக கோல் அடித்த வீரர் : சாதனை படைத்த ரொனால்டோ.. TOP 5 பட்டியலில் உள்ள வீரர்கள் யார் யார் ?

இந்த ஆண்டில் நாடு மற்றும் கிளப் அணிக்காக அதிக கோல் அடித்த வீரராக ரொனால்டோ சாதனை படைத்துள்ளார்.

ஆண்டில் அதிக கோல் அடித்த வீரர் : சாதனை படைத்த ரொனால்டோ.. TOP 5 பட்டியலில் உள்ள வீரர்கள் யார் யார் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலகப்புகழ்பெற்ற கால்பந்து வீரரான ரொனால்டோ இங்கிலாந்தில் கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் அணியில் விளையாடினார். அப்போது அவருக்கும் அணியின் பயிற்சியாளரருக்கும் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டது. முக்கிய போட்டிகளில் ரொனால்டோ வெளியே அமரவைக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அவருக்கும் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப்புக்கும் இடையே மோதல் போக்கு நிலவிவந்தது. இந்த விவகாரம் பெரிதான நிலையில், ரொனால்டோவை அவரின் சம்மதத்தோடு வெளியேற்றுவதாகவும், அவரோடு செய்திருந்த ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வதாகவும் மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அறிவித்தது.

அதன் பின்னர் அவர் சவூதி அரேபியாவின் அல் நாசர் கிளப்புக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு தற்போது சவூதி அரேபியாவில் விளையாடி வருகிறார். அங்கு அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சவூதி ப்ரோ லீக்கில் அதிக கோல் அடித்த வீரராவும் ரொனால்டோ திகழ்ந்து வருகிறார்.

ஆண்டில் அதிக கோல் அடித்த வீரர் : சாதனை படைத்த ரொனால்டோ.. TOP 5 பட்டியலில் உள்ள வீரர்கள் யார் யார் ?

இந்த நிலையில், இந்த ஆண்டில் நாடு மற்றும் கிளப் அணிக்காக அதிக கோல் அடித்த வீரராக ரொனால்டோ சாதனை படைத்துள்ளார். அவர் போர்ச்சுகல் மற்றும் அல் நசீர் அணிக்காக இந்த ஆண்டு மட்டும் 53 கோல்கள் அடித்துள்ளார். இரண்டாம் இடத்தில இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி கேன் இங்கிலாந்து மற்றும் பேயர்ன் முனிச் அணிக்காக 52 கோல்கள் அடித்துள்ளார்.

மூன்றாம் இடத்தில் பிரான்ஸ் மற்றும் பிஎஸ்ஜி அணிக்காக எம்பாப்பே 52 கோல்களும், நான்காம் இடத்தில் எர்லிங் ஹாலண்ட் நார்வே மற்றும் மான்செஸ்டர் சிட்டி அணிக்காக 50 கோல்கள் அடித்துள்ளார். இந்த ஆண்டு மெஸ்ஸி அதிக போட்டிகளில் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories