விளையாட்டு

சர்வதேச அறிமுக போட்டியிலேயே அரைசதம் : அசத்தும் தமிழ்நாடு வீரர் - இந்திய அணி அபார வெற்றி !

தென்னாபிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சர்வதேச அறிமுக போட்டியிலேயே அரைசதம் : அசத்தும் தமிழ்நாடு வீரர் - இந்திய அணி அபார வெற்றி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரை இளம் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றது.

பின்னர் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என சமன் செய்தது. அதனைத் தொடர்ந்து தற்போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் அறிமுகமானார். இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆறாம் தொடக்கத்தில் இருந்தே அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

சர்வதேச அறிமுக போட்டியிலேயே அரைசதம் : அசத்தும் தமிழ்நாடு வீரர் - இந்திய அணி அபார வெற்றி !

இதனால் 27.3 ஓவர்களில் வெறும் 116 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.இந்திய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர்களான அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். குல்தீப் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 16.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் கடைசி வரை களத்தில் இருந்த சாய் சுதர்சன் 43 பந்துகளில் 55 ரன்களை விளாச, ஸ்ரேயாஸ் ஐயர் 52 ரன்கள் எடுத்தார்.

இந்த போட்டியில் அரைசதம் எடுத்த சாய் சுதர்சன் அறிமுகப்போட்டியிலேயே அரைசதம் விளாசிய 17-வது இந்திய வீரர் என்ற பெருமையையும், அறிமுகப்போட்டியிலேயே அரைசதம் விளாசிய முதல் தமிழ்நாடு வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories