விளையாட்டு

ஹர்திக் பாண்டியா IN - ரோகித் சர்மா OUT : ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்த்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹர்திக் பாண்டியா IN - ரோகித் சர்மா OUT : ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் 2008ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை 16 தொடர்கள் நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்கஸ் அணி 5வது முறையாக ஐ.பி.எல் பட்டத்தை வென்றது.

இந்நிலையில் 17வது ஐ.பி.எல் தொடர் 2024ம் ஆண்டு நடைபெற உள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த தொடருக்கான ஆர்வம் இப்போதே தொடங்கிவிட்டது. மேலும் இம்மாதம் துபாயில் வீரர்களுக்கான மினி ஏலம் நடைபெற உள்ளது. இதில் சில வீரர்களை விடுவிக்கவும், புதிய வீரர்களை எடுக்கவும் அணி நிர்வாகத்தினர் தயாராகி வருகிறார்கள்.

இதற்கிடையில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் டிரேட் முறையில் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்த்திக் பாண்டியாவை ரூ.15 கோடிக்கு வாங்கியது. அந்த நொடியிலிருந்தே மும்பை அணியின் கேப்டனாக ரோகித் சர்மா தொடர்வாரா? என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் இந்த கேள்விகளுக்கு ஹர்த்திக் பாண்டியாவை கேப்டனாக நியமனம் செய்து முற்றுப்புள்ளி வைத்துள்ளது மும்பை அணி நிர்வாகம். இது ஒரு வகையில் மும்பை அணியின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்தாலும் கடந்த 10 ஆண்டுகளாக கேப்டனாக இருந்து 5 முறை ஐ.பி.எல் கோப்பையை வாங்கி கொடுத்த ரோகித் சர்மாவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியுள்ளது அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து நடப்பு ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோகித் சர்மா விளையாடுவாரா? அல்லது அணியில் இருந்து வெளியேறுவாரா? என்ற ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories