விளையாட்டு

"நான் இப்படி இருப்பேன் என்றே நினைத்தே பார்க்கவில்லை" - புறக்கணிப்பு குறித்து சஞ்சு சாம்சன் கூறியது என்ன ?

நான் கிரிக்கெட் விளையாட தொடங்கிய போது, இப்படியான இடத்தில் இருப்பேன் என்று கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை என சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.

"நான் இப்படி இருப்பேன் என்றே நினைத்தே பார்க்கவில்லை" - புறக்கணிப்பு குறித்து சஞ்சு சாம்சன் கூறியது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

2014ம் ஆண்டு Under-19 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்து சிறப்பாகச் செயல்பட்டவர் சஞ்சு சாம்சன். இந்த தொடரில் 54 பந்தில் 85 ரன்களை அடித்து அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்தார். இதன் பிறகு ஜிம்பாபே அணிக்கு எதிரான டி20 போட்டியில், இந்திய அணியில் 2015ம் ஆண்டு அறிமுகமானார்.

அதன் பிறகு தொடர்சியாக இந்திய அணியில் இடம் பெற்று வந்தாலும் அப்போது, தோனி, தினேஷ் கார்த்தி போன்ற முன்னணி வீரர்கள் இருந்ததால் இவருக்குத் தொடர்ந்து விளையாட வாய்ப்பு கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் அப்போது இவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

அதன் பின்னர் பந்த், இஷான் கிஷன் போன்றோரும் சாம்சனுக்கு கடும் போட்டியாக வந்ததால் 8 வருடம் ஆகியும் மிக குறைவான போட்டிகளில்தான் இந்திய அணிக்காக அவர் ஆடியுள்ளார். கடைசியாக நடைபெற்ற உலகக்கோப்பை தொடரிலும் அவருக்கு அணியில் இடம் வழங்கப்படவில்லை.

"நான் இப்படி இருப்பேன் என்றே நினைத்தே பார்க்கவில்லை" - புறக்கணிப்பு குறித்து சஞ்சு சாம்சன் கூறியது என்ன ?

அதே போல, ஆசிய விளையாட்டு போட்டிக்கான இளம் அணியிலும் அவருக்கு இடம் மறுக்கப்பட்ட நிலையில், தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரிலும் சஞ்சு சாம்சன் புறக்கணிக்கப்பட்டார். பிசிசிஐ-யின் இந்த முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து, சஞ்சு சாம்சன் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், " இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா எப்போதும் எனக்கு ஆதரவு தெரிவித்து வந்துள்ளார். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு நான் கேப்டனாக அறிவித்தபின்னர் எனக்கு போன் செய்து ரோகித் சர்மா வாழ்த்து தெரிவித்தார்.

எப்போது நட்புடன் பழகுபவர் ரோகித் சர்மா. அதேபோல் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என்பதால், என்னை பலரும் அதிர்ஷ்டம் இல்லாத வீரர் என்று சொல்கிறார்கள். ஆனால் நான் கிரிக்கெட் விளையாட தொடங்கிய போது, இப்படியான இடத்தில் இருப்பேன் என்று கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories