விளையாட்டு

பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் மைதானம் : உலகக்கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியாவுக்கு 241 ரன்கள் இலக்கு !

இந்திய அணி 50 ஓவர்களில் 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது .

பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் மைதானம் : உலகக்கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியாவுக்கு 241 ரன்கள் இலக்கு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் கில் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த ஷ்ரேயாஸ் 4 ரன்னுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி 81/3 என சரிவை சந்தித்த நிலையில், விராட் கோலி - கே.எல்.ராகுல் இணை நிதானமாக ஆடினர். தொடர்ந்து அரைசதம் விளாசிய விராட் கோலி 54 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பின்னர் வந்த ஜடேஜா 9 ரன்னுக்கு வெளியேறினார்.

பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் மைதானம் : உலகக்கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியாவுக்கு 241 ரன்கள் இலக்கு !

பின்னர் நிதானமாக ஆடிய கே.எல் ராகுல் 66 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சூரியகுமார் 18 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். ஷமி 6 ரன்னுக்கும், பும்ரா 1 ரன்னுக்கும் ஆட்டமிழக்க, இறுதிக்கட்டத்தில் குல்தீப் 10 ரன்களும், சிராஜ் 9 ரன்களும் குவிக்க இந்திய அணி 50 ஓவர்களில் 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது .

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 241 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. இந்த மைதானம் பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் நிலையில், இந்த போட்டியில் இந்தியா வெற்றிபெற வாய்ப்பிருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories