விளையாட்டு

மனித உரிமையா அல்லது இரண்டு புள்ளிகளா? - ஆஸ்திரேலிய அணியை விமர்சித்த ஆப்கான் வீரர் - காரணம் என்ன ?

ஆஸ்திரேலிய அணியின் பழைய செயலை குறிப்பிட்டு, ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹாக், ஆஸ்திரேலிய அணியை விமர்சித்துள்ளார்.

மனித உரிமையா அல்லது இரண்டு புள்ளிகளா? - ஆஸ்திரேலிய அணியை விமர்சித்த ஆப்கான் வீரர் - காரணம் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வந்த அரசை வீழ்த்தி தற்போது அங்கு தாலிபான் ஆட்சி நடைபெற்று வருகிறது. தாலிபான் ஆட்சிக்கு வந்ததும் அங்குள்ள மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் பெண்களுக்கு உண்டான உரிமைகளும் பறிக்கப்பட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது.

குறிப்பாக பெண்கள் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதற்கும், தொண்டு நிறுவனங்களில் பணியாற்றுவதற்கும் பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் பங்கேற்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சில இடங்களில் பெண்கள் வெளியே வருவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இப்படி ஆப்கானிஸ்தானில் நடக்கும் மனித உரிமை மீறல்களை குறிப்பிட்டு கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஆப்கானிஸ்தான் அணியுடனான தொடரை ஆஸ்திரேலிய அணி புறக்கணித்தது.

மனித உரிமையா அல்லது இரண்டு புள்ளிகளா? - ஆஸ்திரேலிய அணியை விமர்சித்த ஆப்கான் வீரர் - காரணம் என்ன ?

இந்த நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் நாளை நடைபெறும் உலகக் கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை ஆஸ்திரேலிய அணி சந்திக்கவுள்ளது. இந்த சூழலில், ஆஸ்திரேலிய அணியின் பழைய செயலை குறிப்பிட்டு, ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹாக், ஆஸ்திரேலிய அணியை விமர்சித்துள்ளார்.

தனது இன்ஸ்டா பக்கத்தில்நவீன் உல் ஹாக், "மனித உரிமைகளை காரணம் காட்டி விளையாட மறுத்த ஆஸ்திரேலியா, உலகக் கோப்பையில் என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்பதை காண சுவாரஸ்யமாக உள்ளது. மனித உரிமையா அல்லது இரண்டு புள்ளிகளா?" என்று பதிவிட்டுள்ளார். இருநாட்டு தொடரில் விளையாட மறுத்த ஆஸ்திரேலியா தற்போது ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானை எதிர்த்து விளையாட சம்மதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories