விளையாட்டு

இங்கிலாந்தை நொறுக்கி அபார வெற்றிபெற்ற இந்தியா : முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறி அசத்தல் !

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது .

இங்கிலாந்தை நொறுக்கி அபார வெற்றிபெற்ற இந்தியா : முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறி அசத்தல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியும், போட்டியை நடத்தும் இந்திய அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

தொடக்க வீரர் சுப்மன் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து வந்த கோலி ரன் கணக்கை தொடங்காமல் டக் அவுட்டானார். பின்னர் வந்த ஸ்ரேயாஸ் 4 ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்திய அணி, 40 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது. எனினும் அடுத்து ஜோடி சேர்ந்த ரோஹித் - ராகுல் கூட்டணி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது.

இங்கிலாந்தை நொறுக்கி அபார வெற்றிபெற்ற இந்தியா : முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறி அசத்தல் !

ரோஹித் ஒருமுனையில் அதிரடியாகி ஆட மற்றொரு முனையில் ராகுல் தடுப்பாட்டம் ஆடினார். இறுதியில் ராகுல் 39 ரன்களுக்கும், ரோஹித் 87 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். ஜடேஜா 8 ரன்னுக்கும், ஷமி 1 ரன்னிலும் ஆட்டமிழந்தாலும், இறுதிக்கட்டத்தில் சூரியகுமார் 49 ரன்கள் குவித்து அதிரடி காட்ட இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 229 ரன் குவித்தது.

பின்னர் 230 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி, ஆரம்பத்தில் அதிரடியாக தொடங்கினாலும், பும்ரா பந்துவீச்சில் மலான், ரூட் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்களும் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 34.5 ஓவரில் 129 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் காரணமாக இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. மேலும், முதல் அணியாக இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories