விளையாட்டு

"நான் 100 % நியூசிலாந்து வீரர்தான், இதே கேள்வியை எத்தனை முறை கேட்பீர்கள் ?" - கடுப்பான ரச்சின் ரவீந்திரா!

நான் எப்போதுமே 100 சதவீதம் நியூசிலாந்து வீரர் தான். அதே நேரம் என்னுடைய இந்திய வம்சாவளியை நினைத்து பெருமைப்படுகிறேன் என நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா கூறியுள்ளார்.

"நான் 100 % நியூசிலாந்து வீரர்தான், இதே கேள்வியை எத்தனை முறை கேட்பீர்கள் ?" - கடுப்பான ரச்சின் ரவீந்திரா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் நியூஸிலாந்து அணியும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்தப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்திரில் வெற்றபெற்றது.

இந்த போட்டியில் நியூஸிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா சதமடித்து அசத்தினார். மேலும் உலகக்கோப்பை போட்டியில் 23 வயதில் இரண்டு முறை சதமடித்து சச்சினின் சாதனையை சமன் செய்துள்ளார். மேலும், இந்த உலகக்கோப்பையில் அதிகம் கவனிக்கப்படும் வீரராகவும் மாறியுள்ளார்.

"நான் 100 % நியூசிலாந்து வீரர்தான், இதே கேள்வியை எத்தனை முறை கேட்பீர்கள் ?" - கடுப்பான ரச்சின் ரவீந்திரா!

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவின் இந்திய வம்சாவளி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ரச்சின் ரவீந்திரா, "இதே கேள்வியை எத்தனை முறை கேட்பீர்கள் ? நான் எப்போதுமே நூறு சதவீதம் நியூசிலாந்து வீரர் தான். அதே நேரம் என்னுடைய இந்திய வம்சாவளியை நினைத்து பெருமைப்படுகிறேன்.

இந்த நாட்டில் தான் என்னுடைய பெற்றோர்கள் பிறந்து வளர்ந்தார்கள்.எனவே இந்தியாவில் உள்ள கள சூழல் எப்படி இருக்கும் என்று எனக்கு நன்றாகவே தெரியும். இங்கு பேட்டிங் செய்வது சுலபமாக இருக்கும். நான் இந்தியாவுக்கு வந்து பல தொடர்களில் விளையாடியிருக்கிறேன். நான் குழந்தையாக இருக்கும் போது பார்வையாளர்கள் என் பெயரை கூறி கத்த வேண்டும் என்று கனவு கண்டேன். அந்த கனவு நேற்று நிஜமானது" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories