விளையாட்டு

"இவர்களுக்கு சிங்கிள் எடுக்கவே தெரியவில்லை, கஷ்டம்தான்" - இங்கிலாந்து அணியை விமர்சித்த ஹர்பஜன் சிங் !

இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு சிங்கிள் ரன் எடுக்கவே தெரியவில்லை என முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார்.

"இவர்களுக்கு சிங்கிள் எடுக்கவே தெரியவில்லை, கஷ்டம்தான்" - இங்கிலாந்து அணியை விமர்சித்த ஹர்பஜன் சிங் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கை இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 156 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.

பின்னர் ஆடிய இலங்கை அணி 25.4 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றிபெற்றது. இந்த தோல்வி காரணமாக இங்கிலாந்து அணியில் அரையிறுதி கனவு ஏறத்தாழ முடிவுக்கு வந்துள்ளது. இங்கிலாந்து அணி இதுவரை நடைபெற்றுள்ள 5 ஆட்டங்களில் 4 ஆட்டங்களில் தோல்வியடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

"இவர்களுக்கு சிங்கிள் எடுக்கவே தெரியவில்லை, கஷ்டம்தான்" - இங்கிலாந்து அணியை விமர்சித்த ஹர்பஜன் சிங் !

இந்த நிலையில், இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு சிங்கிள் ரன் எடுக்கவே தெரியவில்லை என முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், " இங்கிலாந்து வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இலக்கை துரத்தவே விரும்புகிறது. இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு சிங்கிள் ரன் எடுக்கவே தெரியவில்லை.அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் அடிக்கவே விரும்புகிறார்கள்.

இங்கிலாந்துக்கு அடுத்த போட்டி இந்தியாவுடன் நடக்கிறது. அவர்களால் இந்திய அணியை வீழ்த்த முடியுமா என்பது சந்தேகமே. லக்னோ ஆடுகளம் சுழற்பந்து வீசிக்கு சாதகமாக இருக்க அதிகபட்ச வாய்ப்புகள் உண்டு. இதன் காரணமாக இந்தியா மூன்று ஸ்பின்னர்கள் உடன் களமிறங்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories