விளையாட்டு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்வி: கழிவறையில் அழுத பாபர் அசாம்- பாக். முன்னாள் வீரர் கூறிய அதிர்ச்சி தகவல்!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தோல்விக்கு பின்னர் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம், கழிவறைக்கு சென்று அழுததாக அந்நாட்டின் முன்னாள் வீரர் முகமது யூசுப் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்வி: கழிவறையில் அழுத பாபர் அசாம்- பாக். முன்னாள் வீரர் கூறிய அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தானை முதல் முறையாக வீழ்த்தி அசத்தியது. மேலும், பாகிஸ்தான் அணிக்கு எதிராக 8 போட்டிகளில் ஆடியுள்ள ஆப்கானிஸ்தான் அணி முதல் முறையாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தோல்வி: கழிவறையில் அழுத பாபர் அசாம்- பாக். முன்னாள் வீரர் கூறிய அதிர்ச்சி தகவல்!

அதே நேரம் இந்த தோல்வி மூலம் பாகிஸ்தான் அணி இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் என தொடர்ந்து 3 தோல்விகளை சந்தித்துள்ளது. இந்த தோல்விக்கு அணியின் கேப்டன் பாபர் அசாமே காரணம் என அந்நாட்டு ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த தோல்விக்கு பின்னர் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம், கழிவறைக்கு சென்று அழுததாக அந்நாட்டின் முன்னாள் வீரர் முகமது யூசுப் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த பின் கேப்டன் பாபர் ஓய்வறையில் கண்ணீர் விட்டு கதறி அழுததாக தகவல் வந்தது. இந்த தோல்விக்கு பாபர் அசாம் மட்டும் காரணமல்ல. ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணியும், அணி நிர்வாகமுமே ரணம். கடினமான காலங்களில் ஒட்டுமொத்த பாகிஸ்தானும் பாபர் அசாமுக்கு ஆதரவளிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

banner

Related Stories

Related Stories