விளையாட்டு

BCCI மீது புகார் அளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் : நடவடிக்கை எடுக்க மறுத்த ICC - பின்னணி என்ன ?

BCCI மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அளித்த புகாருக்கு ICC நடவடிக்கை எடுக்க மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

BCCI மீது புகார் அளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் : நடவடிக்கை எடுக்க மறுத்த ICC - பின்னணி என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. ஆனால், இந்த தொடர் ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திவருகிறது. வழக்கமாக மார்ச்சில் இருந்து மே வரையான காலகட்டத்தில்தான் உலகக்கோப்பை நடைபெறும். ஆனால், ஐபிஎல் காரணமாக பிசிசிஐ மழை காலமான அக்டோபர் மாதத்தில் உலகக்கோப்பையை நடத்தியது.

அதேபோல உலகக்கோப்பையில் தொடக்க போட்டிக்கு வெகு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, அந்த நாளில்தான் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால், இந்த முறை இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகள் மோதிய போட்டி எந்தவித தொடக்க நிகழ்ச்சியும் நடைபெறாமல் மிகவும் எளிமையான நடத்தப்பட்டது. இதன் காரணமாக ரசிகர்கள் யாரும் இன்று மைதானம் வெறிச்சோடு கிடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதன்பின்னர் அகமதாபாத் மைதானத்தில் இந்தியா -பாகிஸ்தான் மோதிய போட்டிகளை காண பல்வேறு நட்சத்திர நடிகர்கள் அழைக்கப்பட்டுள்ளதும், அந்த நாளில் இசை நிகழ்ச்சி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் பிசிசிஐ ஏற்பாடு செய்தது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

BCCI மீது புகார் அளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் : நடவடிக்கை எடுக்க மறுத்த ICC - பின்னணி என்ன ?

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு உரிய விசா வழங்காதது, அஹமதாபாத் மைதானத்தில் எழுப்பப்பட்ட மதரீதியிலான கோசம். அதை உற்சாகப்படுத்தி மத ரீதியிலான பாடலை ஒலிக்கவிட்ட நீர்வாகம் என ஒரு சார்பு தொடராகவே இது நடந்து வருகிறது.

இதன் காரணமாக மைதானத்தில் எழுப்பப்பட்ட மதரீதியிலான கோசம், பாகிஸ்தான் பத்திரிகையாளர்கள் மற்றம் ரசிகர்களுக்கு விசா வழங்காதது ஆகியவை குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி அமைப்பிடம் புகார் தெரிவித்துள்ளது.

BCCI மீது புகார் அளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் : நடவடிக்கை எடுக்க மறுத்த ICC - பின்னணி என்ன ?

இது குறித்து அந்த அணியின் சமூக வலைதள பதிவில், "பாகிஸ்தான் பத்திரிகையாளர்களுக்கான விசா தாமதம் மற்றும் 2023 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் ரசிகர்களுக்கு விசா கொள்கை இல்லாதது குறித்தும் ஐசிசியிடம் மீண்டும் ஒருமுறை எங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். 14 அக்டோபர் 2023 அன்று நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டியின் போது பாகிஸ்தான் அணியை குறிவைத்து நடந்து கொண்டது தொடர்பாகவும் புகார் அளித்துள்ளோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்க ஐசிசி அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனி நபர் அல்லது, சில கும்பல்கள் குறித்த வன்முறைக்கு ஐசிசி-யால் நடவடிக்கை எடுக்கமுடியும் என்றும், ஆனால், பெரிய அளவு பார்வையாளர்கள் இது போன்ற செயல்களை செய்தால் அதற்கு நடவடிக்கை எடுக்கமுடியாது என ஐசிசி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே நேரம் பாகிஸ்தான் நாட்டவருக்கு விசா குறித்து ஐசிசி எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories