விளையாட்டு

"அந்த தோல்விக்கு பிறகு வீட்டை விட்டு வெளியே செல்லமுடியவில்லை"- பாக். முன்னாள் ஜாம்பவான் கூறிய போட்டி எது

உலககோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்தபின்னர் பல நாட்கள் எங்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியவில்லை என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

"அந்த தோல்விக்கு பிறகு வீட்டை விட்டு வெளியே செல்லமுடியவில்லை"- பாக்.  முன்னாள் ஜாம்பவான் கூறிய போட்டி எது
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரின் இந்தியா தனது முதல் இரண்டு போட்டிகளில் அபாரமாக வென்றுள்ளது. அடுத்ததாக இந்திய அணி பாகிஸ்தானை சந்திக்கவுள்ளது.

இதுவரை ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தியதில்லை. இதனால் இந்த போட்டியில் வெல்ல பாகிஸ்தான் தீவிரமாக முயற்சி செய்யும் என்றும், தனது சாதனையை தக்க வைக்க இந்தியா போராடும் என்பதால் இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

"அந்த தோல்விக்கு பிறகு வீட்டை விட்டு வெளியே செல்லமுடியவில்லை"- பாக்.  முன்னாள் ஜாம்பவான் கூறிய போட்டி எது

இந்த நிலையில், உலககோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்தபின்னர் பல நாட்கள் எங்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியவில்லை என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர்,"1 996-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் பெங்களூருவில் நாங்கள் இந்தியாவை சந்தித்தோம். ஆனால், அந்த போட்டியில் நாங்கள் தோல்வியடைந்தோம். அந்த தோல்வியை யாராலும் ஜீரணிக்கமுடியவில்லை.

நாங்கள் பலத்த பாதுகாப்புடன் வீடு திரும்ப வேண்டியிருந்தது, பல நாட்கள் எங்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. அது நகரம் போல இருந்தது. ஆனால், இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து தோல்வியடையும் வரலாறு இந்த முறை உடைக்கப்படும். பாகிஸ்தான் அணி அதைச் செய்யும் திறமை கொண்டது. ஏனெனில் டி 20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக தொடர்ச்சியாக 5 தோல்விகளுக்குப் பின்னர் 2021-ம் ஆண்டு துபாயில் பாகிஸ்தான் அதை செய்து காட்டியது" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories