விளையாட்டு

ICC உலகக்கோப்பை : முதல் போட்டியில் படுதோல்வியடைந்த நடப்பு சாம்பியன்.. பழிதீர்த்த நியூஸிலாந்து !

உலகக்கோப்பைத் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை நியூஸிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ICC உலகக்கோப்பை : முதல் போட்டியில் படுதோல்வியடைந்த நடப்பு சாம்பியன்.. பழிதீர்த்த நியூஸிலாந்து !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியாவில் நடைபெறுகிறது.

இந்த தொடரின் முதல் போட்டியில் நேற்று நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் கடந்த முறை இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்த நியூஸிலாந்து ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் களமிறங்காத நிலையில், நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சனும் இந்த போட்டியில் களமிறங்கவில்லை. இதனால் நியூஸிலாந்து அணியை டாம் லதம் தலைமை தாங்கினார்.

இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் தங்கள் விக்கெட்டுகளை இழந்தது. எனினும் கேப்டன் ஜோஸ் பட்லர் ( 43 ரன்கள் ) மற்றும் ஜோ ரூட் (77 ரன்கள் ) குவித்தனர். இறுதிக்கட்ட வீரர்களும் சிறிய பங்களிப்பு கொடுக்க இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் என்ற சவாலான இலக்கை எட்டியது.

ICC உலகக்கோப்பை : முதல் போட்டியில் படுதோல்வியடைந்த நடப்பு சாம்பியன்.. பழிதீர்த்த நியூஸிலாந்து !

பின்னர் ஆடிய நியூஸிலாந்து அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. 10 ரன்களில் தொடக்க வீரர் வில் யங் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் இளம்வீரர் ரச்சின் ரவீந்திரா களமிறங்கினார். இந்த ஜோடி ஆரம்பத்தில் இருந்தே இங்கிலாந்து பாணியில் அதிரடியாக ஆடி இங்கிலாந்து அணிக்கே அதிர்ச்சி அளித்தது.

இருவரும் அதிரடியாக ஆடி சதம் விளாசினர். இந்த ஜோடியை இறுதிவரை இங்கிலாந்து வீரர்களால் வீழ்த்த முடியவில்லை. இறுதியில் நியூஸிலாந்து அணி 36.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. நியூஸிலாந்து தொடக்க வீரர் கான்வே 152 ரன்கள் குவித்தும்,ரச்சின் ரவீந்திரா 123 ரன்கள் குவித்தும் இறுதிவரை களத்தில் இருந்தனர்.

banner

Related Stories

Related Stories