விளையாட்டு

48 மணி நேர இடைவெளி.. இங்கிலாந்திலும் இந்தியாவிலும் அரை சதமடித்த தமிழ்நாடு வீரர்.. அடுத்து இந்திய அணிதான்!

48 மணி நேர இடைவெளியில் தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் இங்கிலாந்திலும் இந்தியாவிலும் அரை சதமடித்து அசத்தியுள்ளார்.

48 மணி நேர இடைவெளி.. இங்கிலாந்திலும் இந்தியாவிலும் அரை சதமடித்த தமிழ்நாடு வீரர்.. அடுத்து இந்திய அணிதான்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உள்நாட்டு தொடர்களில் கலக்கி வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் ஐபிஎல் தொடரில் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணியில் கடந்த ஆண்டு இடம்பிடித்தார். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் அந்த அணி சாய் சுதர்சனை தக்கவைத்தது.

அதனைத் தொடர்ந்து ஐபிஎல் இறுதிப்போட்டியில் 47 பந்துகளில் 6 சிக்சர், 8 பவுண்டரிகள் என 96 ரன்கள் விளாசி இறுதி ஓவரில் ஆட்டமிழந்தார். ஆட்டமிழந்து ஓய்வறைக்கு சென்ற அவருக்கு குஜராத் வீரர்கள் அனைவரும் எழுந்து நின்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அதன் பின்னர், ஐபிஎல் தொடரில் தான் காட்டிய அதிரடியை அவர் டி.என்.பி.எல் தொடரிலும் தொடர்ந்தார். இதன் காரணமாக அவருக்கு இலங்கையின் கொழும்பு நகரில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 5 ஏ அணிகள் பங்கேற்கும் எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய ஏ அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

48 மணி நேர இடைவெளி.. இங்கிலாந்திலும் இந்தியாவிலும் அரை சதமடித்த தமிழ்நாடு வீரர்.. அடுத்து இந்திய அணிதான்!

இந்த தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக ஆடி சதம் விளாசினார். மேலும் அந்த தொடரில் தனது சிறப்பான செயல்பாட்டை வெளிக்காட்டி கவனிக்கத்தக்க வீரராக உறுவெடுத்தார். இதன் காரணமாக இங்கிலாந்து கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் சர்ரே அணி சாய் சுதர்சனை ஒப்பந்தம் செய்தது.

இந்த அணிக்காக ஹம்ஷைர் அணிக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸில் 73 ரன்களை விளாசினார். இதன் மூலம் மோசமான நிலையில் இருந்து சர்ரே அணியை காப்பாற்றினார்.பின்னர் இரண்டாவது இன்னிங்சில் அணியை தோல்வியில் இருந்த காக்க இறுதிவரை போராடினார். ஆனால், எந்த வீரர்களின் ஒத்துழைப்பும் கிடைக்காத நிலையில், கடைசி வீரராக 40 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். எனினும் இந்த போட்டியில் சர்ரே அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

48 மணி நேர இடைவெளி.. இங்கிலாந்திலும் இந்தியாவிலும் அரை சதமடித்த தமிழ்நாடு வீரர்.. அடுத்து இந்திய அணிதான்!

இந்த போட்டிக்கு இடையே இந்தியாவில் நடக்கும் இரானி கோப்பை தொடருக்கான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு சாய் சுதர்சன் தேர்வானார். இதனால் கவுண்டி போட்டி முடிந்த 24 மணி நேரத்தில் இந்தியா திருப்பிய சாய் சுதர்சன் ரஞ்சி சாம்பியனான சவுராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு தொடக்கவீரராக களமிறங்கினார்.

இந்த போட்டியிலும் தனது பார்மைத் தொடர்ந்த சாய் சுதர்சன் அரை சதமடித்து, 164 பந்துகளில் ஏழு பவுண்டரிகளுடன் 72 ரன்களில் ஆட்டம் இழந்தார். இந்த போட்டியின் முதல் நாள் முடிவில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணி 8 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் குவித்துள்ளது. இதில் அணிக்காக அதிக ரன் குவித்தவர் சாய் சுதர்சன் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories